TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – பெண்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

1
TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை
TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை
TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – பெண்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்‌ கீழ்‌, தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில்‌ காலியாக உள்ள 3 வட்டார இயக்க மேலாளர்கள்‌ மற்றும்‌ 24 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்‌ பணியிடங்கள்‌ நிரப்பப்பட உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, தகுதியான பெண் விண்ணப்பத்தார்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNSRLM
பணியின் பெயர் வட்டார இயக்க மேலாளர்கள்‌ & வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்‌
பணியிடங்கள் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி 20-10-2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNSRLM காலிப்பணியிடங்கள்:
  • வட்டார இயக்க மேலாளர்கள்‌ –  3 பணியிடங்கள்
  • வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்‌ – 24 பணியிடங்கள்
  • என மொத்தம் 27 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில்‌ நிரப்பப்பட உள்ளது.
Exams Daily Mobile App Download
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office ல் குறைந்தபட்சம்‌ 6 மாத காலம்‌ கணிணி படித்ததற்கான சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌. வாழ்வாதார இயக்கம்‌ துறை சார்ந்த திட்ட செயல்பாடுகளில்‌ குறைந்தபட்சம்‌ மூன்று வருட அனுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

அரசு பணிக்கான அனுபவ விவரம்:

வாழ்வாதார இயக்கம்‌ துறை சார்ந்த திட்ட செயல்பாடுகளில்‌ குறைந்தபட்சம்‌ மூன்று வருட அனுபவம்‌ உள்ளவர்கள் வட்டார இயக்க மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இரண்டு வருட பணி அனுபவம் உள்ளவர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 340 + காலிப்பணியிடங்கள் || சற்று முன் வெளியானது!

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதாவது இரண்டிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 20-10-2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2022 Pdf

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!