TNRD Trichy Recruitment 2020: 8th/10th தேர்ச்சி பெற்றவரா ? – உங்களுக்கான TNRD திருச்சி வேலைவாய்ப்பு 2020

1
8th 10th தேர்ச்சி பெற்றவரா - உங்களுக்கான TNRD திருச்சி வேலைவாய்ப்பு 2020
8th 10th தேர்ச்சி பெற்றவரா - உங்களுக்கான TNRD திருச்சி வேலைவாய்ப்பு 2020

8th/10th தேர்ச்சி பெற்றவரா ? – உங்களுக்கான TNRD திருச்சி வேலைவாய்ப்பு 2020

TNRD Trichy Recruitment 2020. திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, இலால்குடி ஊராட்சியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிக்கையை தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகவல்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் படித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 

நிறுவனம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு
பணியின் பெயர் அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர்
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க இறுதி நாள் 11.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
காலிப்பணியிடங்கள் :
  • அலுவலக உதவியாளர்: 01
  • பதிவறை எழுத்தர்: 02
TNRD Trichy Recruitment 2020 வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, வயது வரம்பானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் ஆதிதிராவிடர், பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNRD திருச்சி கல்வி தகுதி:
  1. அலுவலக உதவியாளர்: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. பதிவறை எழுத்தர்: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNRD திருச்சி மாத ஊதியம்:
  • அலுவலக உதவியாளர்: ரூ.15700-50000
  • பதிவறை எழுத்தர்: ரூ.15900-50400
அலுவலக உதவியாளர் பணியின் தன்மை:

அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல்.

பதிவறை எழுத்தர் பணியின் தன்மை:

அலுவலகத்திற்கு வரும் தபால்களை பகிர்மான பதிவெண் பெற்று இருக்கை எழுத்தர்களுக்கு ஒப்படைத்தல் மற்றும் பதிவறையில் உள்ள கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பராமரித்தல்.

TNRD திருச்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

Step 1: திருச்சி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையத்தளமான https://tiruchirappalli.nic.in/ என்ற இணையத்தளத்தை பின்பற்றவும்.

Step 2: அதில் திருச்சி மாவட்ட தொழில் அல்லது சமீபத்திய தொழில் என்ற செய்தி பக்கத்திற்கு செல்லவும்.

Step 3: அலுவலக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் பணியிடங்களுக்கான விளம்பரம் மற்றும் தகுதிகளை சரிப்பார்த்துக் கொள்ளவும்.

Step 4: விவரங்களை சரிப்பார்த்த பின்பு மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 11/12/2020 க்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திருச்சிராப்பள்ளி. இது போன்ற அரசு மற்றும் தனியார் பணிகள் குறித்த விவரங்களை அறிய எங்கள் வலைத்தளத்தை பின்பற்றவும்.

Download TNRD திருச்சி அலுவலக உதவியாளர் Notification 2020 Pdf

Download TNRD திருச்சி பதிவறை எழுத்தர் Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!