TNPSC தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பணி வழங்கவில்லை – பெண் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

0
TNPSC தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பணி வழங்கவில்லை - பெண் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
TNPSC தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பணி வழங்கவில்லை - பெண் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
TNPSC தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பணி வழங்கவில்லை – பெண் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை கொண்டே தேர்வாளர்களுக்கு பணியிடம் வழங்கப்படுகிறது. ஆனால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கியும் எனக்கு பணியிடம் வழங்கபடவில்லை என தென்காசியை சேர்ந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு:

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 முதலான தகுதித் தேர்வுகளை நடத்தி தகுதியான தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக எந்த தகுதி தேர்வும் நடத்தப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் எடுத்த முடிவால் கண் கலங்கிய கோபி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அதாவது குரூப்-2 தேர்வு மே 21ஆம் தேதி தேர்வு நடைபெறும் எனவும், குரூப்-4 தேர்வு ஜூன் 24 ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுவரை இல்லாமல் இந்தாண்டு தான் தகுதி தேர்வினை எழுத பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு எப்போதும் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படும். அனைத்து தேர்விலும் முன்னிலையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அந்த வகையில் தென்காசியை சேர்ந்த பெண் ஒருவர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் எனக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி தடயவியல் துறை இளநிலை அறிவியல் அலுவலர் தேர்வில் மகேஸ்வரி தேர்ச்சி பெற்றிருக்கிறார். இதற்கு பின்பு நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு என அனைத்திலும் கலந்துகொண்டார். இவரை விட மிக குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் கூட பணியில் அமர்ந்துவிட்டனர். தனக்கு ஏன் பணியிடம் வழங்கப்படவில்லை என டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விளக்கம் கேட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!