வைணவத்தின் சிறப்புகள்

0

வைணவத்தின் சிறப்புகள்

  • ஒன்றை உள்ளபடி உணருவதற்கு காரணம் எதுவோ அதன் பெயர் – பிராமணம்.
  • பிராமணத்தின் வகைகள் – 3, அவை 1)பிரத்தியட்சம் 2)அனுமானம் 3)சப்தம்
  • திருமாலை தெய்வமாகக் கொண்ட மதம் – வைணவமதம்
  • வைணவத்தின் வகைகள் – 2, அவை 1)வடகலை, 2)தென்கலை
  • வடகலையினர் வேதசாத்திரங்களுக்கும், தென்கலையினர் நாலாயிர திவ்ய பிரபந்தங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பர்.
  • ஊறு, ஓசை, ஒளி, சுவை, நாற்றம் ஆகிய குணங்களையும், அதற்கடிப்படையான இந்திரியங்களையும் பற்றி அறிய உதவும் சாதனம் – பிரத்தியட்சம்
  • ஓரிடத்தில் காணப்படும் இருபொருட்களும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருக்கும் நிலைகண்டு வேறோரிடத்தில் காணப்படாத ஒன்றை கண்டதென ஊகிப்பது – அனுமானம் எனப்படும்.
  • இந்திரியங்களாலும், அனுமானத்தாலும் உள்ளபடி உணரமுடியாத உயரிய பொருளை உணருவதற்கான காரணமும், அட்சரங்களின் கூட்டமும் – சப்தம் எனப்படும்.
  • சப்த பிராமணங்களுள் சிறந்ததாக கருதப்படுவது – சுருதி
  • சுருதியின்(வேதம்); வகைகள் – 4, (ரிக், யஜூர், சாம, அதர்வணம்)
  • ஸ்மிருதிகளை இயற்றியவர்கள் – மனு முதலான மஹான்கள்.
  • விஷ்ணுபுராணத்தை இயற்றியவர் – பராசரர்
  • ஸ்ரீபாகவதபுராணத்தை இயற்றியவர் – வியாஸர்
  • வேதங்களின் கருத்துக்களை தெளிவாக தெரிவிக்கும் நூல்கள் – உபபிரமாணங்கள் (இதிகாசங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள் முதலியன)
  • வேதத்தின் இரு பெரும் பிரிவுகள் – கர்மகாண்டம், பிரம்ம காண்டம்.
  • பரமபுருஷனின் முகமலர்ச்சிக்காக செய்யும் வேள்வி, தானம், தவம், முதலியவற்றையும் அவற்றைச் செய்யும் முறைகளைப் பற்றி கூறும் வேதப்பகுதி – கர்மகாண்டம்.
  • பரமபுருஷனின் திருமேனி, குணங்கள், அவனை அடைய உதவும் உபாயங்கள் ஆகியவற்றை விளக்குவது – பிரம்மகாண்டம்.
  • கர்மகாண்டத்திற்கான வழிநூல்கள் – மனு ஸ்மிருதி
  • பிரம்மகாண்டத்திற்கான வழிநூல்கள் – இதிகாசங்கள், விஷ்ணுபுராணம் முதலிய புராணங்கள்
  • ஸ்மிருதிகள் – ஆசாரங்களைப் பற்றி விளக்குகிறது.
  • இதிகாசம், புராணங்கள் – பரமபுருஷன், பக்தி, வீடுபேறு முதலியவற்றை விளக்குகிறது.
  • புராணங்கள் அனைத்தையும் முதலில் படைத்தவன் – பிரமன்
  • பிரமனின் குணங்கள் – 3, அவை சத்துவம், ராசசம், தாமசம்.
  • பிரமனானவன் தாமசகுணம் மேலிட்டிருந்தபோது படைத்தவை -அக்கினி, சிவபுராணங்கள்
  • பிரமனானவன் ராசசகுணம் மேலிட்டிருந்தபோது படைத்தவை – பிரமபுராணம்
  • பிரமனானவன் சத்துவகுணம் மேலிட்டிருந்தபோது படைத்தவை – நாராயணபுராணம்
  • நாராயணனின் திருவவதாரமாக கருதப்படுபவர் – வியாஸர்
  • இதிகாசங்களுள் சிறந்தது – இராமாயணம்
  • ஒரு பொருளுக்குரிய தன்மையை அதில் அறியாது வேறுபொருளின் தன்மையை அறிதல் (முத்துச்சிப்பி போல்) – அந்யாதாஜ்ஞாநமாம்
  • வெள்ளியின் தன்மையை அறிதல் – அந்யதாஜ்ஞாநமாம்
  • ஒரு பொருளை வேறொரு பொருளாக அறிதல் – விபரீதாஸ்ஞாநமாம்
  • ஒரு பொருளை துணைப்புருஷனாக அறிதல் – விபரீதஜ்ஞாநமாம்
  • வியாஸர் செய்த சாஸ்திரங்களில் சிறந்தது – பிரம்மசூத்திரங்கள்
  • பராசரரின் மகன் – வியாசர்
  • பஞ்சராத்திரம் என்னும் சிறந்த சாத்திரத்தைப் படைத்தவர் – நாராயணர்.
  • வாயு பகவானுடைய அவதாரமாகவும், ருத்ராம்சம் பொருந்தியவராகவும் கருதப்படுபவர் – சிறிய திருவடி என அழைக்கப்படும் அனுமன் (சொல்லின்செல்வன்)
  • திருவனந்தாழ்வானின் பூரண அவதாரமாயும், பஞ்சாயுதங்களின் அம்சம் (சக்தியாவேசம்) உள்ளவராகவும் கருதப்படுபவர் – எம்பெருமானார்.
  • விஷ்ணு என்னும் உயர்ந்த தெய்வத்தை வேதங்களினாலேயே அறிய முடியும் என உரைத்தவர் – வேத வியாசர்.
  • ‘எல்லா வேதங்களினாலும் அறியப்பெறும் பொருள் நானே“ என உரைத்தவர் – ஸ்ரீபார்த்தசாரதி (நூல் – பகவத்கீதை)
  • எவன் ஒரு உண்மையை தாம் உள்ளபடி உணர்ந்து பிறரும் அதனை உள்ளபடி உணர, உய்வு பெற நூலின் மூலமாக வெளியிடுகிறானோ அவன் – ஆப்ததமன ஆப்ததமன ஆப்ததமன் என அழைக்கப்படுகிறான்.
  • ‘ஸஹோவாச வ்யாஸ: பாராசர்ய:” என வேதத்தினாலே புகழப்பெற்றவர் – வேதவியாசர்.
  • கிருத யுகத்தில் இருந்த முக்திமார்க்க வகை – ஞான மார்க்கம் (திரேதா யுகத்தில் இம்மார்க்கம் சிறிது மாறுதல் அடைந்தது. துவாபர யுகத்தில் அழிவுற்றது)
  • துவாபர யுகம் அழிவுற்றபோது பராசரருக்கும்ää சத்தியவதிக்கும் மகனாக பிறந்தவர் – வியாசர்
  •  ‘ஜபாஷ்யம்” எனும் ஒப்பற்ற நூலை அருளியவர் – எம்பெருமானார்.
  • ஸ்ரீ வசன பூசன சூத்திரத்திற்கு வியாக்கியானம் அருளிச்செய்தவர் – மணவாளமாமுனிகள்.
  • ‘நாராயணகதாம் இமாம்” எனத் தொடங்கும் பாடலைக் கொண்ட நூல் – மகாபாரதம்
  • நம்பிள்ளை ஈடு, ஆசார்ய ஹிருதயம் எனும் நூல்களில் தலைவராக கருதப்படும் ஆழ்வார் – நம்மாழ்வார்.
  • உண்மைப்பொருளை அன்புடன் சிந்திக்கும் சிந்தனை – பக்தி எனப்படும்.
  • உண்மைப்பொருளை சரணடைதல் – பிரபத்தி
  • பிரபஞ்சம் – காரியப்பொருள். திருமால் – காரணப்பொருள் – முதல்வகை.
  • பிரபஞ்சம் – உடைமைப்பொருள்: திருமால் – உடையவன்.
  • மற்றொரு வகை – சாஸ்திர வகை.
  • விஷ்ணுவை வேதங்களிலேயே அறிய முடியும் என கூறியவர் – வேதவியாசர்.
  • சுருதியில் உள்ள பிரம்ம எனும் சொல் குறிப்பது – பெருமையுடைய பொருள் (இப்பெருமையானது 1)பொருளின் பெருமை (பிருகத்துவம்) 2)அப்பொருளுக்கான இயல்பின் பெருமை(குணப்பிருகத்துவம்) என இருவகைப்படும்.
  • எல்லா பொருள்களிலும் உள்ளும் புறமும் நிரம்பி ஒன்றையும் விடாது இருந்து அப்பொருளுக்குரிய அவ்வாறான இருப்பே – பொருளின் பெருமை ஆகும்.
  • எப்பொருள் தன் இயல்பால் எங்கும் பரந்திருக்கிறதோ அவ்வாறான இருப்பு இயல்பின் பெருமை ஆகும்.
  • பிரம்ம என்னும் சொல்லின் பொருள் விளக்கும் தெய்வம் – நாராயணர்
  • ‘அந்தர்பஹிச்ச” என்னும் பொருள் விளக்குவது – பொருளின் பெருமைக்கு உரியவன்
    நாராயணன்
  • ‘யஸ்ஸர்வஜ்ஞ” எனும் பொருள் விளக்குவது – இயல்பின் பெருமையை உடையவன்
    நாராயணன்.
  • ‘ஹிரண்யகர்ப்ப: ஸமவர்த்ததாக்ரே, நஸத்நசாஸத் சிவஏவ கேவல:” ‘ஏகோஹவை நாராயண ஆஸீத்” என்னும் 3 வாக்கியங்களில் முதல் வாக்கியம் – எல்லாம் அழிந்த காலத்தில் பிரமன் இருந்தான் என்று உணர்த்துகிறது. ‘சத்தும் அசித்தும் அக்காலத்தில் இல்லை. சிவன் மட்டுமே இருந்தான் என 2-ம் வாக்கியம் உணர்த்துகிறது. பிரமனும், சிவனும் இல்லாத அக்காலத்தில் நாராயணன் மட்டுமே இருந்தான் என 3-ம் வாக்கியம் உணர்த்துகிறது.
  • நாராயணனை ‘ஹிரண்யகர்ப்ப” ‘சிவ” என கூறும் நூல் – விஷ்ணுசஹஸ்ரநாமம்.
  • ‘ஒன்றுந்தேவும் உலகுமுயிரும் மற்றும் யாதுமில்லா அன்று நான்முகன் தன்னோடு தேவருலகோடு படைத்தான்” – நம்மாழ்வார்.
  • ‘பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவாரே” – நம்மாழ்வார்
  • இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனியறிந்தேன் எம்பெருமான் உன்னை இனியறிந்தேன் காரணன் நீ கற்றவை நீ கற்பவைநீ, நற்கிரிசை நாரணன்நீ நன்கறிந்தேன் நான்” – திருமழிசையாழ்வார்.
  • ‘ஏகோஹவை நாராயண ஆஸீத் நப்ரஹ்மா நேசாந” என்னும் மகோபநிஷத் வாக்கியம் உணர்த்தும் பொருள் – உலகம் உண்டாவதற்கு முன் நாராயணன் ஒருவனே இருந்தான். பிரமன் மற்றும் சிவன் இல்லை.
  • ‘ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசாந” என்னும் மகோபநிஷத் வாக்கியம்
    உணர்த்தும் பொருள் – சிவன் பிரமன் விஷ்ணு மூவரும் ஒருவரே.
  • பிரபஞ்சம் – தேவர், மனிதன், பசு பட்சிகள், புல்பூண்டுகள் எனும் நான்கு வகையில்
    அமைந்துள்ளது.
  • மகாபாரதத்தில் கூறப்பட்ட சிவசஹஸ்ரநாமத்தில் நாரயணன் பெயர் கூறப்படவில்லை. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் நாரயண நாமங்களாக ஹிரண்யகர்ப்ப, சிவ எனும் நாமங்கள் உள்ளன.
  • புபுத்தை (அ) ஆகாங் என்பதன் பொருள் – உண்மை அறிய விருப்பம்
  • ஆகாங்யுற்றது – ஸாகங்ம்
  • ஆகாங்யற்றது – நிராகங்ம்.
  • உத்தாலகர் என்ற அறிஞரின் மகன் பெயர் – சுவேதகேது.
  • குடத்திற்கு மண் உபாதான காரணம், குயவன் நிமித்த காரணம், அதுபோல இப்பிரபஞ்சத்திற்கு பிரஹ்மம் நிமித்தகாரணாய் உபாதான காரணமாய் உள்ளது.
  • ஆசாரியனிடத்தில் கேட்டப் பொருளை தனக்கு தெரிந்த பிரமாணங்களையும்,
    யுக்திகளையும் கொண்டு நிச்சயித்து கொள்ளுதல் – மனனம்.
  • ஒரு பொருளை எண்ணெயின் தாரை போன்று இடைவிடாது சிந்திக்கும் சிந்தனை – தியானம்
  • உண்மைப்பொருளாய் இருப்பதால் ‘நிர்விசேஷம்”; எனகூறப்படுவது – பிரம்ம மந்திரம்.
  • காரண பொருளின் இருவகைகள் – உபதானம், அபாதானம்
  • காரியம்(குடம்) உபாதான காரணமான நிலையை (எந்த மண் குடமானதோ
  • அம்மண்ணான நிலையை) பெற்று அபாதானத்தோடு (எந்த மண் ரூபமாக ஆகவில்லையோ அம்மண்ணோடு) ஒன்றாய் பொருந்தியிருக்கும் நிலை – லயம் ஆகும்.
  • தன்மாத்திரைகள் அகங்காரத்திற்கும், அகங்காரம் மகாதத்துவத்திலும்,மகாதத்துவம்,
    அவ்யக்தலிலும், அவ்யக்தம் அஷ்சரத்திலும், அஷ்சரம் தமசிலும்,லயமடைகின்றன.
  • முக்குணமும் சமமாய் இருக்கும் நிலை – அவ்யக்தம்.
  • ஜீவஸ மூலத்தை தன்னிடம் கொண்டுள்ளதால் மிக லட்சணமாய் குணமுள்ளதாய்
    உள்ள நிலை – ‘அரம்”
  • நீரில் கரைந்த உப்பு போன்றும், சந்திரகாந்த கல்லிலுள்ள நீர் போன்றும், சூரியகாந்த கல்லிலுள்ள ஒளசண்யம் போன்றும், இறைவன் ஒருவனே உணரக்கூடிய சூட்சும நிலை – தாமசம்
  • ஸத்வம், ரஜ்ஜு, தமஸ ஆகிய முக்குணங்களில் உள்ள ஏற்றதாழ்வுகளை வைஷம்யம் என்பர்.
  • வைஷம்ய நிலையிலுள்ளது – காரியபொருளாகும். எ.கா. மஹான், அகங்காரம், தன்மாத்திரைகள் போன்றன.
  • பிரமத்திற்கு உண்மையில் குணம் கிடையாது. அது சுத்தமானது. அவித்தை எனும் தோஷத்தின் தொடர்பால் பிரஹ்மத்திற்கு குணங்கள் ஏற்படும் என ‘ய ஸர்வஞ்ஞ” ‘ப்ராஸ்ய சக்தி” எனும் ஸ்ருதிகள் கூறுகின்றன.
  • பிரஹ்மத்திற்கு ஞானம், சக்தி, முதலிய எண்ணிறந்த கலியாண குணங்கள் உண்டு. அக்குணங்கள் சத்தியம் எனவும் வேதம் கூறுகின்றது.
  • ‘தத் த்வம் அஸி” எனும் வாக்கியம் ஸமாநாதிகரண வாக்கியம் எனப்படுகிறது.
  • பரமாத்மா நாரயணன். அவனுக்கு ஒத்தபொருளும் ஒவ்வாத பொருளும் குணங்களும் உண்மையில் உண்டு.
  • இரு சொற்களும் முதல் வேற்றுமை உடையனவாக உள்ள வாக்கியம் ‘ஸமாநாதிகரண வாக்கியம்” எனப்படும்.
  • இருசொற்களும் வேற்றுமையல்லாத ஒரு பொருளைத் தருபவனவாக இருந்தால் அவ்வாக்கியம் ‘வ்யதிகரண வாக்கியம்” எனப்படும்.
  • ஜீவன், சிறப்பு பெறுவதற்கு காரணம் – தான் அனுபவித்தல், பிறருக்கு உபகரித்தல் போன்ற இறைவன் விரும்பதகுந்த அன்போடு கூடிய இந்த சேஷத்வ நிலையை – தாஸ்யம் என்பர். தாஸ்யம
  • ஜீவனுக்கே உரிய சிறப்பியல்பு – தாஸ்யம் எனப்படும்.
  • ஒரு பொருள் ஒரு கணம் இருந்தால் அவ்வாறு இருப்பதை ஸத்தை என்பர். இரண்டு கணங்கள் இருந்தால் அந்தந்த காலத்தில் அப்பொருள் இருப்பதை ‘ஸத்திதி” என்பர்.
  • முயற்சியை ‘ப்ரவ்ருத்தி” என்றும், முயற்சியின்மையை ‘நிவ்ருத்தி” என்றும் கூறுவர்.
  • ஒருவருடைய ஸத்தை, ஸத்திதி,  ப்ரவ்ருத்தி,  நிவ்ருத்தி ஆகியவை இறைவனுக்கு
    உரியனவாகவே காணப்படுகின்றமையால், ஜீவன் எம்பெருமானுக்கு ‘பரதந்திரன்” பரதந்திரன எனப்படுகின்றான். எம்பெருமான் ‘ஸ்வதந்த ‘ஸ்வதந்த ‘ஸ்வதந்திரன்” எனப்படுகிறான்.
  • ஜீவன் இறைவனுக்கு உபயோகமாய் இருக்க உள்ள தகுதி – சேஷத்வம் என்றும், அவ்வாறு உபயோகமாய் இருப்பது – ‘பாரதந்திரியம்” எனப்படுகிறது.
  • ஒருவன் தன் சேஷத்வ பாரதந்திரியங்களை அறியும்போது, அவ்வறிவு உடையனாயிருக்கையைப் பற்றி அவன் ‘வைஷ்ணவன்” என புகழப்படுகிறான்.
  • சூரியன், அதன் ஒளி ஆகிய இரண்டும் ‘தேஜோத்ரவ்யங்கள்” எனப்படும்.
  • ஜாநாதி – ஒரு பொருளை உள்ளபடி உணருதல்.
  • இச்சதி – பொருளின் இனிமையை அறிந்து அதனை விரும்புதல்
  • யதேத – அப்பொருளை அடைய முயலுதல்
  • கரோதி – அதற்கு ஏற்ற வழியை கடைப்பிடித்தல்.
  • அநுபவதி – முடிவில் அப்பொருளையடைந்து இன்பம் பெறுதல
  •  ‘தத்வஸாரம்” என்ற நூலை எழுதியவர் – நடாதூர் அம்மான்.
  • ஸ்வாதந்திரியம் – ஒன்றை தன் விருப்பத்திற்கேற்ப செய்யவும், செய்யாதிருக்கவும் வல்லமையாயிருத்தல்.
  • சிகீர்ஷா – ஒன்றை செய்வதற்கு அனுகூலமான விருப்பம்.
  • ப்ரயத்நம் – முயற்சி.
  • ‘பரம புருஷனுடைய நிக்ரஹம் ஆதரிக்கத்தக்கது: நிக்ரஹகாரணம் வெறுக்கத்தக்கது:” (“நிக்ரஹம்போலே ப்ராப்யாந்தர்க்கம்”) எனக் கூறியவர் – லோகசாரியன்.
  • கடர் முதலிய ரிஷிகள் தங்கள் தவத்தால் கண்டு கூறிய வேதபகுதிகள் – காடகம்ää
    காலாபகம் எனப்படுகின்றன.
  • நாரயணம் எனும் ரிஷியால் காணப்பெற்ற வேதப்பகுதி – புருஸ_க்தம் எனப்படுகிறது. இது விஷ்ணுவை தேவதையாகக் கொண்டது.
  • வேதத்தை பிரமாணமாக ஒப்புக்கொண்டவர் – வைதிகர் எனப்படுவர்.
  • சப்த ஞானத்தினால் உண்டாகும் உணர்வு – சாப்தேபோதம். இது இருணங்கள் இருந்து மறையும். இதனால் ஸம்ஸ்காரம் உண்டாகும்.
  • ஸம்ஸ்காரத்தினால் ஸ்ம்ருதி என்னும் ஞானம் உண்டாகும். இது இடைவிடாமல் தோன்றும் போது ஸந்ததி எனப்படும்.
  • ஸம்ருதி ஸந்ததி பிரீதி ரூபமாயிருக்கும்போது – பக்தி எனப்படும்.
  • வீடுபேறு பெறுவதற்கு சாதனமான பக்தி, சாண்டில்ய வித்தை, தஹரவித்தை, ஸத்வித்தை, உபகோசலவித்தை என 32 வகைப்படும்.
  • 32-லும் பிரஹ்மம் விஷயப்பொருள் ஆகும்.
  • பிரமத்திற்கு ஸயத்வம், ஞானத்வம், அநந்தத்வம், அமலத்துவம், ஆநந்த்வம் முதலிய குணங்கள் முக்கிய இயல்புகளாம்.
  • இவையனைத்தும் ‘ஸ்வரூப நிரூபக தர்மங்கள்” எனக் கூறலாம்.
  • சாண்டில்ய வித்தை(வில்வித்தை) எனும் பக்தியை ‘சாந்தோக்ய உபநிஷத்” உபதேசம் செய்கிறது.
  • பக்தி நிலைகள் 1)பரபக்தி 2)பரஞானம் 3)பரமபக்தி
  • பரமனை கூடியிருக்கும்போது தரிப்பும்ää கூடப்பெறாத போது தரியாமையும் உண்டாம்படியான நிலையிலுள்ள பக்தி – பரபக்தியாகும்.
  • பெருமானைக் காணும்படியான நிலையிலுள்ள பக்தி – பரஞானம்
  • பெருமான் கிட்டாவிடில் ஜீவனே அழியும் என கூறும்படி உள்ள பக்தி – பரமபக்தி (இதன் மூலம் கிடைப்பது வீடுபேறு)
  • திவோதாஸனின் மகன் தைவோதாஸி என்ற ப்ரதர்த்தனன்,அமரர்க்கும் அசுரர்க்கும் நடந்த போரில் அசுரரை அழித்தான்.
  • பாவங்கள், 1)பூர்வாகம் (முன்பு செய்த பாவம்) 2)உத்தராகம் (பின்பு கவனமில்லாமல் செய்த பாவங்கள்) என இருவகைப்படும்.
  • 1 பங்கு மண், 1 பங்கு தீ, 1 பங்கு நீர் எடுத்து, அதனை (1⁄2 பங்கு மண் 1⁄4 பங்கு தீ 1⁄4 நீர் ), (1⁄2 பங்கு தீ, 1⁄4 பங்கு மண், 1⁄4 நீர்) (1⁄2 பங்கு நீர் 1⁄4 பங்கு தீ 1⁄4 மண்) என பிரித்து சேர்த்து கலத்தல் த்ரிவ்ருத்கரணம் எனப்படும். இது முறையே அண்டம், தேவன், மனிதன் உண்டாக்க தகுதியுடைய காரணப் பொருளாக அமைகிறது.
  • நிலம், நீர், தீ, வாயு, விண் ஆகிய ஐந்தினையும் கலக்கும் கலவியை பஞ்சீகரணம் என்பர்.
  • மஹத்தத்துவம், அஹங்கார தத்துவம், ஐம்பூதங்கள் ஆகிய ஏழு பொருள்களையும் கலக்கும் கலவியை ஸப்தீகரணம் என்பர்.
  • தேவன், மனிதன் முதலியவர்களை படைப்பவர் – தசஷர் முதலானோர்.
  • தசஷர் முதலானோரை படைப்பது – பிரம்மன்
  • அனைத்தையும் படைப்பவன் – நாராயணன்.
  • ‘வருணாச்ரம தருமங்களால் ஆராதிக்கப்படுகின்றவன் நாரயணன்” – எனக் கூறியவர்
    – குல்லூகப்பட்டர்.
  • வ்ருத்ராசுரனை அழித்தவன், முப்பத்து முக்கோடி தேவதைகளை ஸஹாயமாய் கொண்டவன் – இந்திரன்.
  • ஜனமேஜயருக்கு வைசம்பாயனர் கூறியது – மகாபாரதம்
  • வைசம்பாயனருடன் உடனிருந்து கேட்டவர் – ரோமஹர்ஷனரின் குமாரர் உக்ரச்ரவஸ்
  • நைமிசாரணியம் எனும் தலத்தில் யாகம் செய்த சௌனகர் முதலான ரிஷிகளுக்கு மகாபாரதத்தை உபதேசித்தவர் – உக்ரச்ரவஸ்
  • மிக உயர்ந்த விஷயத்தில் தாழ்ந்தவன் ப்ரீதியுடன் செய்யும் ஸ்ம்ருதிஸந்ததியே – பக்தி.
  • பரமபுருஷன் தானே செய்யும் சிருஷ்டி – சமட்டிசிருஷ்டி
  • பரமபுருஷன் பிரமன் மூலமாய் செய்யும் சிருஷ்டி – வியட்டிசிருஷ்டி
  • வ்யஷ்டிசிருஷ்டி செய்வதற்கு ஐம்பூதங்கள், கண் முதலான ஞானேந்திரியங்கள், வாக்கு முதலான கருமேந்திரியங்கள், மஹத்தத்துவம், அஹங்காரம், மனம் ஆகிய அனைத்தும் காரணமாக உள்ளன. இவை அபராப்ருக்ருதி எனப்படும்.
  • ஜீவாத்மாக்களுக்கு பராப்ரக்ருதி என்று பெயர்.
  • இவை இரண்டும் ஸவத்துக்கள். அதாவது இறைவனின் விருப்பத்திற்கிணங்க விநியோகம் செய்யத்தகுந்தவை.
  • அதிஷ்டானம் – உண்மை : அத்யஸ்தம் – மாய தோற்றம் :
  • நியத்ருத்வததை – தூண்டுபவனாயிருக்கும் தன்மை.
  • நியாம்யத்தை – தூண்டப்படும் பொருளாயிருக்கும் தன்மை.
  • ‘புராண ரத்தினம்” எனப்பட்ட நூல் – விஷ்ணு புராணம்.
  • உண்மைப்பொருள்களில் மிகவும் சிறியது – பரமாணு.
  • ஒன்று சேர்ந்த இரு பரமாணுக்கள் – த்வ்யணுகம் எனப்படும்
  • ஒன்றாக கலந்த மூன்று பரமாணுக்கள் – த்ரஸரேணு எனப்படும்.
  • இவ்வாறு வகைப்படுத்தி கூறியவர் – நையாயிகர்
  • எவன் பிறர் அறியாதவாறு எங்கும் பரந்துள்ளானோ அவன்பால் ஒரு பெருமை உண்டு. அப்பெருமை ஸ்வரூபப்ருஹத்வம் எனப்படும்.
  • எவனுடைய எக்குணம் எங்கும் தொடர்புற்றிருக்கிறதோ அவனுடைய அக்குணத்திற்கு உள்ள பெருமையை குணப்ருஹத்வம் என்பர்.
  • எவன் தன் சங்கல்பத்தினால் ஏனைய பொருள்களை (ஜீவன்) பெருமையுற்றதாக செய்கின்றானோ அவனுக்குள்ள அப்பெருமையை ப்ரும்ஹணத்வம் என்பர்.
  • ‘தோஷம் சிறிதுமில்லாமல் ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் எனும் ஆறு குணங்களுள்ளவனுமான இறைவனை உணர்த்தும் பகவாந் எனும் சொல்
    ஏனைய பொருள்களில் அமுக்கியமாய் இருக்கிறது” – ஸ்ரீபராசரர்.
  • இப்பிரபஞ்சத்தையே சரீரமாக கொண்ட ஆத்மா – புருஷோத்தமன்.
  • மழைநீரை உணவாக கொள்ளும் பறவை – சாதகபட்சி.
  • புலஸ்தியர், வசிஷ்டர் ஆகிய மஹான்களுடைய அருளால் மிக உயரிய உண்மைப் பொருளை உணர்ந்தவர் – ஸ்ரீ பராசரர்.
  • பராசரரிடம் சந்தேகம் கேட்டறிந்தவர் – மைத்திரேயர்
  • வால்மீகியிடம் ‘இவாகு வம்சத்தில் திருஅவதாரம் செய்த ராமனே கலியாண குணங்கட்கு கடல்” எனக் கூறியவர் – நாரதர்
  • ‘எம்பெருமான் திருநாமங்களை கூறுவது மிகச்சிறந்த தருமம். எனக்கு இஷ்டம்” எனக் கூறி விஷ்ணுசஹஸ்ரநாமத்தை தருமருக்கு உபதேசித்தவர் – பீஷ்மர்.
  • தேஜஸ் – அனைவரையும் அழிப்பவனாயிருக்கும் தன்மை.
  • ஜீவனுக்கும்(ஆத்மா), கை, கால் முதலிய உறுப்புகளோடு கூடிய ‘பிண்டத்திற்கும்” உள்ள தொடர்பு – சரீராத்மபாவம்.
  • தூண்டும் பொருளையும், தூண்டப்படும் பொருளையும் ஒன்றாக கூறும் முறையில் ‘ஸர்வம் ப்ரஹ்ம்” எனும் வாக்கியம் அமைந்துள்ளது.
  • ‘பிரபஞ்சம் சரீரம், பரஹ்மம் ஆத்மா” – எனக் கூறுவது உபநிஷத்துக்கள்.

பரமபுருஷனுக்குரிய செயல்களாவன :
1)படைத்தல்
2)பிரவேசித்துப் படர்ந்திருத்தல்
3)தரித்தல்
4)தூண்டிநடத்தல்
5)அது அது செய்யும் பணியை உவத்தல்

  • இறைவனின் இயல்பு – இரு வகைப்படும். அவை 1)சொரூப நிலை(தன்னியல்பு) 2)தடத்தநிலை(தடத்தம் – அருகிலிருப்பது(அ)கரைக்கண் இருப்பது)
  • சொரூப நிலையில் முதல்வன் சிவன் என்ற பெயரால் குறிக்கப்படுகிறான்.
  • தடத்தம் என்பது தமிழில் ‘பொதுஇயல்பு” எனவும் குறிக்கப்படும்.
  • பொதுவியல்பு நிலை மூன்று வகைப்படும். அவை 1)இலயநிலை 2)போகநிலை 3)அதிகாரநிலை.
  • எல்லாப் பொருட்களிலும் கலந்து சக்திரூபமாய் இருக்கும் நிலை – இலயநிலை
  • சக்திரூபமாய் நின்று உயிர்களை ஐந்தொழில்படுத்த முற்படும் நிலை – போகநிலை
  • அவ்வத்தொழிலில் யாதெனும் ஒன்றன்பால்படுத்தி தொழிற்படுத்தும் நிலை – அதிகாரநிலை
  • ‘ஸ்வேதரஸமஸ்தஸ்வது விலணன்” – தன்னையொழிந்த, சேதனாசேதனப் பொருட்கள் எல்லாவற்றிலும் வேறுபட்டவன்
  • ‘அந்தமிலாதி அம்பகவான்” எனக் கூறியது – ஆழ்வார்கள்.
  • ஜீவன் அணுவாயிருப்பின், வீடுபேறு பெற்றிருந்தான் எனில்ää இறைவனுக்கு நிகரான
    ஞானப்பெருமை உடையவனாம். இது ஜீவனுக்கே உள்ள பெருமை.
  • இன்பதுன்பங்களை கலந்து அனுபவிக்கும் ஜீவாத்மாக்கள் – ‘ஸம்ஸாரிசேதனர்கள்” என அழைக்கப்படுகின்றனர்.
  • ஸ்வாந்திரன் – தன் விருப்பதிற்கேற்ப ஒன்றை செய்யவும், செய்யாதிருக்கவும் வல்லவன்.

பஞ்சராத்திரம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!