TNPSC சிவில் நீதிபதி தேர்வு – தகுதிகள் என்ன? மாணவர்களின் முக்கிய கோரிக்கை!

0
TNPSC சிவில் நீதிபதி தேர்வு - தகுதிகள் என்ன? மாணவர்களின் முக்கிய கோரிக்கை!
TNPSC சிவில் நீதிபதி தேர்வு - தகுதிகள் என்ன? மாணவர்களின் முக்கிய கோரிக்கை!
TNPSC சிவில் நீதிபதி தேர்வு – தகுதிகள் என்ன? மாணவர்களின் முக்கிய கோரிக்கை!

TNLU கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் சிவில் நீதிபதி பணித்தேர்வு தேர்வுக்கான தகுதி மற்றும் வரம்புகளை மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNPSC தேர்வு:

தமிழகத்தில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பதவிக்கான TNPSC தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. இந்த நீதிபதிக்கான தேர்வை எழுத சட்ட படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு அதிகபட்சமாக 42-க்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுக்கு இறுதியாண்டு சட்டம் பயிலும் மாண்வர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC AE (ECE) Exam – Online Course Mega OFFER!

மேலும் தேர்வாணையத்தின் இந்த அறிவிப்பால் இறுதியாண்டு சட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். அதனால் சிவில் நீதிபதி தேர்வுக்கான தகுதி மற்றும் வரம்புகளை TNPSC தேர்வாணையம் திருத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் TNPSC குரூப் 1 போன்ற தேர்வில் இறுதியாண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர் என்பதை சட்ட கல்லூரி மாணவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் சிவில் நீதிபதி தேர்வுக்கான தகுதி திருத்த செய்ய கோரி TNPSC செயலாளருக்கு தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!