TNPSCயில் ரூ.1,19,500/-சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க..!

0
TNPSCயில் ரூ.1,19,500/-சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க..!
TNPSCயில் ரூ.1,19,500/-சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க..!
TNPSCயில் ரூ.1,19,500/-சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது மீன்வள ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அரசு பணிக்கு தேவையான அனைத்து தகவல்களும் கீழே பகிரப்பட்டுள்ளன.

TNPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தமிழ்நாடு மீன்வளத் துணைப் பணியில் காலியாக உள்ள மீன்வள ஆய்வாளர் பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு என 64 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பதவிக்கான தேர்வு கணினி அடிப்படை (CBT) முறையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12.11.2022 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தால் மீன்வள அறிவியல் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

மீன்வள ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படை தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். CBT தேர்வானது இரண்டு தாள்களாக நடைபெறும். இதில் முதல் தாளில் மீன்வள அறிவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம். இரண்டாம் தாள் இரண்டு பகுதிளாக நடைபெறும். முதல் பகுதி பொதுத் தமிழ். இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். குறைந்தபட்சம் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் 60. இரண்டாம் தாள் பொது அறிவு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

சென்னை கத்தோலிக்க சிரியன் வங்கி வேலைவாய்ப்பு 2022 – டிகிரி தேர்ச்சி போதும் !

Follow our Instagram for more Latest Updates

இந்த தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.37,700 – ரூ. 1,19,500/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ. 150/- செலுத்த வேண்டும். ஏற்கனவே நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. தேர்வுக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 12.11.2022 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!