TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – மதிப்பெண்கள் குறித்த விவரம் வெளியீடு!

0
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு - மதிப்பெண்கள் குறித்த விவரம் வெளியீடு!
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு - மதிப்பெண்கள் குறித்த விவரம் வெளியீடு!
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – மதிப்பெண்கள் குறித்த விவரம் வெளியீடு!

TNPSC குரூப் 2, 2A தேர்வு மே 21ம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்வு முறைகள் மதிப்பெண்கள் குறித்து தேர்வாணைய தலைவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தேர்வர்களுக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.

குரூப் 2, 2A தேர்வு:

தமிழக அரசு துறையில் வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை போன்ற பணியிடங்களுக்கு குரூப் 2, 2A தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்றால் குரூப் 2, 2A தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் நடப்பாண்டு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தேர்வின் கீழ் 5000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

PM Kisan திட்டத்தின் 11வது தவணை குறித்த முக்கிய அப்டேட் – பயனாளிகளின் கவனத்திற்கு!

அதனை தொடர்ந்து விண்ணப்பபதிவுகள் நடைபெற்றது. சுமார் 11,78,175 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகம். குரூப் 2, 2A தேர்வானது மே 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு நெருங்கி வரும் நிலையில் TNPSC தேர்வாணையம் தேர்வு குறித்தும் தேர்வர்களுக்கான அறிவுரைகளையும் வெளியிட்டு வருகிறது. கடந்த வாரம் மைனஸ் மதிப்பெண்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தேர்வாணைய தலைவர் பாடங்கள் அதில் இடம் பெறும் கேள்விகள் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

அதாவது தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும், மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். பொது அறிவுப் பகுதியில் 75 வினாக்கள் கேட்கப்படும். கணித பகுதியிலிருந்து 25 வினாக்கள் இடம்பெறும். இந்த 200 வினாக்களும் வரும் இவை 10 ஆம் வகுப்பு பாட தரத்தில் இருக்கும். முதல்நிலைத் தேர்விலிருந்து 1:10 என்ற அடிப்படையில் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வில் பங்கேற்க முடியும் என்று தலைவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!