PM Kisan திட்டத்தின் 11வது தவணை குறித்த முக்கிய அப்டேட் – பயனாளிகளின் கவனத்திற்கு!

0
PM Kisan திட்டத்தின் 11வது தவணை குறித்த முக்கிய அப்டேட் - பயனாளிகளின் கவனத்திற்கு!
PM Kisan திட்டத்தின் 11வது தவணை குறித்த முக்கிய அப்டேட் - பயனாளிகளின் கவனத்திற்கு!
PM Kisan திட்டத்தின் 11வது தவணை குறித்த முக்கிய அப்டேட் – பயனாளிகளின் கவனத்திற்கு!

மத்திய அரசு விவசாயிகளுக்கு என்று பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

PM Kisan திட்டம்

இந்தியாவில் விவசாயிகளுக்கென்று பல்வேறு வகையான நலத்திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை 3 தவணைகளாக ரூ.2000 வீதம் என மொத்தமாக ரூ.6000 வரை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.

ஜூன் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை – RBI முக்கிய அறிவிப்பு!

இதுவரை பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இதுவரை 10 தவணை வரை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 11 தவணை எப்பொழுது வழங்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். மேலும் 11 தவணை பெற வேண்டுமெனில் பயனாளிகள் தங்களின் e-KYC விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது மே 31ம் தேதிக்குள் சரிபார்த்து முடிக்க வேண்டும் என்று கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இந்த திட்டத்தின் கீழ் 10வது தவணை கடந்த ஜனவரி 1ம் தேதி அன்று வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஆண்டின் முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31ம் தேதிக்குள் வழங்கப்படுவது வழக்கமாகும். அதன்படி கடந்த ஆண்டு மே 15ம் தேதி அன்று அனைத்து பயனாளிக்கும் அவர்களின் வங்கி கணக்கில் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் தவணை இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மே 31ம் தேதிக்குள் 11 தவணை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதனால் பயனாளிகள் அதற்குள் தங்களின் e-KYC விவரங்களை சரிபார்த்து கொள்வது அவசியமானதாகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here