TNPSC Group II பதவிக்கான நேர்காணல் தேதி வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

0
TNPSC Group II பதவிக்கான நேர்காணல் தேதி வெளியீடு - முழு விவரங்கள் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது TNPSC Group II பதவிகளுக்கான நேர்காணல் நடைபெறவுள்ள தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Group II நேர்காணல்:

தமிழக அரசு அலுவலகங்களில் Group II பிரிவின் கீழ்வரும் பதவிகளுக்கென 2022 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 5529 பணியிடங்கள் குறித்த அறிவிப்பானது 23.02.2022 அன்று வெளியிடப்பட்டது. இப்பதவிக்கான Combined Civil Services Examination – II (TNPSC Group II) முதன்மை தேர்வானது 25.02.2023 அன்று திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இத்தேர்வின் முடிவுகள் 11.01.2024 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வின் மூலம் 1:3 என்ற விகிதப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கான நேர்காணல் குறித்த அறிவிப்பானது இன்று (02.02.2024) TNPSC தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வக உதவியாளர் பதவிக்கான பணிவரையறை ரத்து – பள்ளி கல்வித்துறை உத்தரவு!

இந்த அறிவிப்பின் படி, TNPSC Group II பதவிகளுக்கான நேர்காணல் ஆனது 12.02.2024 அன்று முதல் 17.02.2024 அன்று வரை நடைபெறவுள்ளது. மேலும் முதன்மை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), TNPSC ரோடு, சென்னை – 600 003 என்ற முகவரியில் நேர்காணல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!