TNPSC குருப் 4 தேர்வு கல்வித்தகுதி விதிகளில் மாற்றம் – நீதிமன்ற உத்தரவு!

0
TNPSC குருப் 4 தேர்வு கல்வித்தகுதி விதிகளில் மாற்றம் - நீதிமன்ற உத்தரவு!
TNPSC குருப் 4 தேர்வு கல்வித்தகுதி விதிகளில் மாற்றம் - நீதிமன்ற உத்தரவு!
TNPSC குருப் 4 தேர்வு கல்வித்தகுதி விதிகளில் மாற்றம் – நீதிமன்ற உத்தரவு!

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசு பணிகளுக்கான அதிகபட்ச கல்வி தகுதி குறித்த வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

கல்வி தகுதி விதிகள்:

2020 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் மாணவர் விடுதிகளில் சமையல் பணிக்கு 135 காலி இடங்கள் உள்ளதாகவும், இப்பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள் அல்லது பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இப்பணிக்கு 2021 ஜனவரி 22 ஆம் தேதி பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் இவர்கள் கூடுதல் கல்வித் தகுதி கொண்டவர்கள் என்று விசாரணை செய்து 2022 டிசம்பர் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

TNPSC தேர்வில் ஈஸியா பாஸ் ஆகணுமா??

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிக கல்வித் தகுதியைப் பெற்றவர்கள் என்று பணியை ரத்து செய்தது செல்லாது என்று தெரிவித்தார். மேலும் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் கூடுதல் கல்வி தகுதியை கொண்டவர்களை நியமிப்பதன் காரணமாக சம வாய்ப்பு என்பது பறிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதேபோல் குரூப்-4 தேர்வில் அதிக கல்வி தகுதியை உடையவர்கள் நியமிக்கும் தற்போதைய நிலையும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதன் காரணமாக குரூப்-4 பணிக்கு குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்க வேண்டும். அடிப்படை பணிக்கான சிறப்பு விதிகளை மீறி கூடுதல் கல்வி தகுதி உடையவர்கள் மற்றும் வயது உடையவர்களை நியமனம் செய்வது சட்ட விரோதம் என்றும், இதற்கான விதிகளை திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!