TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – குறைந்த விலையில் மாதிரிவினாத்தாள்!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - குறைந்த விலையில் மாதிரிவினாத்தாள்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - குறைந்த விலையில் மாதிரிவினாத்தாள்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – குறைந்த விலையில் மாதிரிவினாத்தாள்!

தமிழகத்தில் ஜூலை 24ம் தேதி TNPSC குரூப் 4 & VAO தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்வர்கள் தீவிரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டு மாதிரி விடைத்தாள்களை தயாரித்த வழங்கி வருகிறது.

மாதிரி விடைத்தாள்:

தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 & VAO தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. சுமார் 21.85 லட்சம் பேர் 2022ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – ‘இதை’ செய்தால் நடவடிக்கை!

இந்த தேர்வில் பட்டியலினத்தவர்களுக்கு வயது வரம்பில் சலுகைகள் உண்டு. இந்த குரூப் 4 தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு இரண்டாம் பகுதி பொது அறிவு பதில் ஆகும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது அவசியம் ஏனெனில் தமிழ் மொழித்தேர்வு தகுதித் தேர்வாக உள்ளது. அடுத்ததாக பொது அறிவு பகுதியில் இருந்து 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும். இதற்கு நடப்பு நிகழ்வுகளை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

பெரும்பாலும் குரூப் 4 தேர்வுக்கான வினாக்கள் 6 – 9 வரையிலான பாட புத்தகங்களில் இருந்து தான் வரும். தற்போது தேர்வு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் மாதிரி விடைத்தாள்களை தயாரித்து வருகிறது. இந்த மாதிரி விடைத்தாள்கள் புதிய பாடத்திட்டத்தின் படி திறமை வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு உருவாக்கப்பட்டது. தற்போது நமது examsdaily வலைத்தளம் குரூப் 4 & VAO தேர்வுக்கான 10 PDF அடங்கிய மாதிரி வினாத்தாள்களை ரூ 149 க்கு வழங்குகிறது. இதனை பெற்று பயனடைய விரும்புபவர்கள் 8101 234 234 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!