TNPSC Group 4 பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகள்!!

0
TNPSC Group 4 பொதுத்தமிழ் - முக்கிய வினா விடைகள்!!
TNPSC Group 4 பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகள்!!

TNPSC குரூப் 4 தேர்வில் பொதுத்தமிழ் பாடம் கட்டாயமான ஒன்றாகும். இலக்கணம், இலக்கியம் மற்றும் தமிழ்த் தொண்டு அடிப்படையில் எண்ணற்ற தலைப்புகளின் கீழ் கேள்விகள் கேட்கப்படும். அதில் இலக்கிய பிரிவில் சமய முன்னோடிகள் என்பது முக்கியமான தலைப்பு. இந்த பதிவில் அத்தலைப்பின் கீழ் உள்ள முக்கியமான கேள்விகள் மற்றும் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்விகள் இரண்டையும் ஒருங்கே காணலாம்.

Q1) முதல் 3 திருமுறைகளின் ஆசிரியர் யார்?

A) திருஞானசம்பந்தர்
B) திருநாவுக்கரசர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்

Q 2) திருவாசகம் இடம்பெற்றுள்ள திருமுறை எது?

A) இரண்டாம் திருமுறை
B) நான்காம் திருமுறை
C) எட்டாம் திருமுறை
D) பத்தாம் திருமுறை

Q.3) திராவிட சிசு என்று போற்றப்படுபவர் யார்?

A) திருஞானசம்பந்தர்
B) திருநாவுக்கரசர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்

Q.4) திருநாவுக்கரசர் காலம் எது?

A) 2ம் நூற்றாண்டு
B) 5ம் நூற்றாண்டு
C) 7ம் நூற்றாண்டு
D) 9ம் நூற்றாண்டு

Q.5) அகராதி என்னும் சொல்லை முதன் முதலில் கையாண்டவர் யார்? (PYQ 2013)

A) திருஞானசம்பந்தர்
B) வீரமாமுனிவர்
C) சுந்தரர்
D) திருமூலர்

Q.6) பண்ணொடு தமிழொப்பாய் எனத் தொடங்கும் பாடல் (PYQ 2013)

A) திருவாசகம்
B) தேவாரம்
C) திருக்கோவையார்
D) திருமந்திரம்

Q.7) பெரிய புராணத்தில் அதிகம் பாடப்பட்டவர் யார்?

A) திருஞானசம்பந்தர்
B) திருநாவுக்கரசர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்

Q.8) அழுது அடியடைந்த அன்பர் யார்? (PYQ 2014)

A) திருஞானசம்பந்தர்
B) மாணிக்கவாசகர்
C) சுந்தரர்
D) திருமூலர்

Q.9) ஒன்றே குலம் ஒருவனே தேவன் ____ நூலின் புகழ்மிக்க தொடர்  (PYQ 2014)

A) திருமந்திரம்
B) திருவாசகம்
C) திருக்குறள்
D) தேம்பாவணி

Q.10) அப்பர், வாகீசர் & தாண்டக வேந்தர்என்று புகழப்படுபவர் யார்? (PYQ 2014)

A) திருஞானசம்பந்தர்
B) திருநாவுக்கரசர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்

விடைகள் – 1-A, 2-C, 3-A, 4-C, 5-D, 6-A, 7-A, 8-B, 9-A, 10-B

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!