TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளில் இழுபறி? தேர்வர்கள் அதிருப்தி!

0
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளில் இழுபறி? தேர்வர்கள் அதிருப்தி!
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளில் இழுபறி? தேர்வர்கள் அதிருப்தி!
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளில் இழுபறி? தேர்வர்கள் அதிருப்தி!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் திட்டமிட்டபடி கடந்த மே 21ம் தேதி அன்று குரூப் 2,2ஏ தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் இத்தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதையடுத்து தொற்று பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டு TNPSC தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. மேலும் கால அட்டவணையில் குறிப்பிட்டபடி, குரூப் 2,2A பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இத்தேர்வு மூலமாக குரூப் 2 பதவியில் 116 காலிப்பணியிடங்களும் மற்றும் குரூப் 2ஏ பதவியில் 5413 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இத்தேர்வு கடந்த மே 21ம் தேதி அன்று அறிவித்தபடி நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்வு நடைபெறுவதால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 11,78,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், இத்தேர்வை 9 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே எழுதியுள்ளனர். மேலும் TNPSC தேர்வு கால அட்டவணையில், குரூப் 2,2ஏ தேர்வின் முதல்நிலை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் செப்டம்பர் மாதத்தில் முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD விகிதம் உயர்வு!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு முடிந்த பிறகு குரூப் 2,2ஏ தேர்வின் முதல்நிலைத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியானது. ஆனாலும் தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் செப்டம்பர் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடைபெற இருப்பதால் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டால் தான் முதன்மைத்தேர்வுக்கு தயாராக சுலபமாக இருக்கும். இந்த நிலையில் குரூப் 2,2ஏ தேர்வின் முதல்நிலை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. இவ்வாறு தேர்வு முடிவுகளை தள்ளி போட்டு கொண்டே இருப்பதால் தேர்வர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!