SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD விகிதம் உயர்வு!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD விகிதம் உயர்வு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD விகிதம் உயர்வு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD விகிதம் உயர்வு!

இந்திய ரிசர்வ் வங்கி வட்டிகளுக்கான ரெப்போ விகிதத்தை உயர்த்திய நிலையில் பாரத ஸ்டேட் வங்கி நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளது. அதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

FD விகிதம்

நாட்டின் மிக பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) சில குறிப்பிட்ட நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதாவது, இந்திய ரிசர்வ் வங்கி வட்டிகளுக்கான ரெப்போ விகிதமாக உயர்த்தியுள்ள நிலையில் SBI வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய விகித முறை கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதாவது, SBI வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு பொது மக்களுக்கு 2.90 சதவீதம் முதல் 5.65 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.40 சதவீதம் முதல் 6.45 சதவீதம் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல, 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான டெபாசிட்களுக்கு FD விகிதம் 15 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.40 சதவீதத்தில் இருந்து 4.55 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இனி இணையதளம் மூலம் பான் கார்டு பதிவிறக்கம் செய்யலாம் – எளிய வழிமுறைகள் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

மேலும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகைகளுக்கு FD விகிதம் 5.45 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேலும், 1000 நாட்களுக்கான நிலையான வைப்புத் திட்டங்களுக்கு பொது மக்களுக்கு 6.10% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 6.60% வட்டியும் வழங்கப்படுகிறது. மேலும், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் துவங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் கிட்டத்தட்ட 75 நாட்களுக்கு SBI உத்சவ் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!