TNPSC குரூப் 2, 2ஏ & குரூப் 4 தேர்வு முடிவுகள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

1
TNPSC குரூப் 2, 2ஏ & குரூப் 4 தேர்வு முடிவுகள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC குரூப் 2, 2ஏ & குரூப் 4 தேர்வு முடிவுகள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC குரூப் 2, 2ஏ & குரூப் 4 தேர்வு முடிவுகள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் TNPSC தேர்வாணையத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடத்தப்பட்ட குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் முறையே இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வு மூலமாக ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அரசு போட்டித்தேர்வுகள் அனைத்தும் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்பு இந்த வருடத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் TNPSC தேர்வாணையம் ஆனது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. இதில் குறிப்பிட்டபடி குரூப் 2,2ஏ பணியிடத்திற்கான தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி அன்று நடைபெற்றது.

பின்னர் குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதனால் குரூப் 4 தேர்வு முடிவடைந்த பிறகு இரு தேர்வுகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகளுக்காக TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் குரூப் 2,2ஏ தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதியிலும் அத்துடன் குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதத்திலும் வெளியிடப்படும் என TNPSC தேர்வாணையம் அறிவித்தது.

தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – முக்கிய தகவல் வெளியீடு!

Exams Daily Mobile App Download

அதன்படி இம்மாத முடிவடைய உள்ள நிலையில் குரூப் 2,2ஏ தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியாகும் என ஆர்வமாக தேர்வர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், மீண்டும் குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதாவது குரூப் 2,2ஏ தேர்வு முடிவுகள் அடுத்த மாதமும் குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் TNPSC தேர்வர்கள் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!