TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு – ரூ.56,100 சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு - ரூ.56,100 சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு - ரூ.56,100 சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு – ரூ.56,100 சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பை அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து TNPSC தேர்வாணையம் கூட்டுறவு தணிக்கைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TNPSC வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகள் மூலமாக அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து TNPSC தேர்வாணையம் கூட்டுறவுத் தணிக்கைத்துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது TNPSC தேர்வாணையத்தால் புதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை ரத்து – மாநில அரசு புதிய அறிவிப்பு!

இப்பணிக்கு 01.07.2022 அன்று நிலவரப்படி 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணியிடத்திற்கு எம்.ஏ(கூட்டுறவு) அல்லது எம்,காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவு பிரிவில் டிப்ளோமா அல்லது ஐசிஏஐ படிப்பில் தேர்ச்சி இருக்க வேண்டும். இப்பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இதையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இப்பணியில் நியமிக்கப்படுவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.56,100 முதல் 1,77,500 லட்ச ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்புமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று பிப்ரவரி 21ம் தேதிக்குள் பதிவு செய்திருக்க வேண்டும்

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 18 மாத DA நிலுவைத்தொகை? ரூ.2 லட்சம் வரவு!

இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. அத்துடன் தேர்வு கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்படுகிறது. இந்த தேர்வு கட்டணம் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM உள்ளிட்ட வகுப்பினருக்கு மற்றும் விதவைகளுக்கு கிடையாது. இப்பணிக்கான தேர்வு ஏப்ரல் 30ம் தேதி அன்று காலை முதல் தாள் மற்றும் மதியம் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற https://www.tnpsc.gov.in/Document/english/2022_02_AD_Cooperative%20Audit_Eng.pdf எ என்ற லிங்க் கிளிக் செய்ய வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!