TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

0
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது  ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

TNPSC கலந்தாய்வு:

மேற்கண்ட பதவிக்கான எழுத்து தேர்வு கடந்த 27.05.2023. மு.ப. மற்றும்‌ பி.ப. அன்று நடைபெற்று, எழுத்துத்தேர்வில்‌ விண்ணப்பதாரர்கள்‌ பெற்ற மதிப்பெண்‌ மற்றும்‌ தரவரிசை விவரங்கள்‌ 19.09.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டது.

இப்பணிக்கான மூலச்சான்றிதழ்கள்‌ சரிபார்ப்பு மற்றும்‌ கலந்தாய்வு 03.04.2024 முதல்‌ 10.04.2024 வரை தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌, எண்‌.3, தேர்வாணையச்‌ சாலை, (பிராட்வே பேருந்து நிலையம்‌ மற்றும்‌ கோட்டை ரயில்‌ நிலையம்‌ அருகில்‌) சென்னை -600 003 ல்‌ உள்ள தேர்வாணைய அலுவலகத்தில்‌ நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள உள்ளவர்களின் தற்காலிக தெரிவாளர்களின்‌ பட்டியல்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது.மேலும் இதற்கு வர தவறினால்‌ அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!