TNPSC யில் 600-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.37,700/-

0
TNPSC யில் 600-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.37,700/-
TNPSC யில் 600-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.37,700/-
TNPSC யில் 600-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.37,700/-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 04.04.2022 அன்று அறிவித்த அறிவிப்பில் Automobile Engineer, Assistant Engineer, Assistant Director, Technical Assistant ஆகிய பல்வேறு பணிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 626 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்கவும். கல்வி, வயது, தேர்வு செய்யும் விதம், விண்ணப்பிக்கும் விதம் போன்ற அனைத்து தகவல்களும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Public Service Commission (TNPSC)
பணியின் பெயர் Automobile Engineer, Assistant Engineer, Assistant Director, Technical Assistant & Others
பணியிடங்கள் 626
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Automobile Engineer – 4
  • Junior Electrical Inspector – 8
  • Assistant Engineer (Agricultural Engineering) – 66
  • Assistant Engineer (Highways Department) – 33
  • Assistant Director – 18
  • Assistant Engineer (Civil) – 309
  • General Foreman – 7
  • Technical Assistant – 11
  • Assistant Engineer (Rural Development and Panchayat Raj Department) – 93
  • Assistant Engineer – 64
  • Assistant Engineer (Chennai Metropolitan Development Authority) – 13
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள்/ கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் Diploma, Engineering Degree, B.Sc, B.E/ B.Tech போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

Automobile Engineer, Assistant Engineer அனுபவம்:

விண்ணப்பதாரர் இப்பணிகளுக்கு தொடர்புடைய பிரிவுகளில் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 5 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TNPSC வயது வரம்பு:

Automobile Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 1.7.2022 நாள் கணக்கின்படி அதிகபட்சம் 37 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

மற்ற பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 1.7.2022 நாள் கணக்கின்படி அதிகபட்சம் 32 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TNPSC ஊதிய விவரம்:

Automobile Engineer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,05,700/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

TN’s Best Coaching Center

மற்ற அனைத்து பணிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.37,700/- முதல் ரூ.1,38,500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

TNPSC தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Computer Based Test (CBT)
  • Interview

Computer Based Test ஆனது 26.06.2022 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர் முதல் முறை விண்ணப்பிப்பவராக இருந்தால் One Time Registration செய்து கொள்ள வேண்டும். ஒரு முறை One Time Registration செய்தால் அது செல்லுபடியாகும் கால அளவு 5 வருடம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

One Time Registration செய்வதற்கு ரூ.150/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும். இது தவிர தேர்வு கட்டணமாக ரூ.200/- வசூலிக்கப்படும். இந்த கட்டணங்களை Online மூலம் செலுத்த வேண்டும்.

SC/ ST/ PWD பிரிவினர் மற்றும் விதவை பெண்களுக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது.

TNPSC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பங்களை 03.05.2022 இறுதி நாளுக்குள் பதிவு செய்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். இறுதி நாளுக்கு பின் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள், சரியான தகவல்கள் இல்லாத மற்றும் சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!