TNPSC முக்கிய அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்கள் இதோ..!

0
TNPSC முக்கிய அறிவிப்பு வெளியீடு - முழு விவரங்கள் இதோ..!
TNPSC முக்கிய அறிவிப்பு வெளியீடு - முழு விவரங்கள் இதோ..!
TNPSC முக்கிய அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்கள் இதோ..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது தமிழ்நாடு தோட்டக்கலை சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கான நேர்காணல் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களையும் இப்பதிவை வாசித்து தெரிந்து கொள்ளலாம்.

TNPSC முக்கிய நேர்காணல் அறிவிப்பு வெளியீடு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது கடந்த ஆண்டு 05.02.2021 அன்று வெளியிட்ட 02/2021 அறிக்கை எண் படி, தமிழ்நாடு தோட்டக்கலை சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக தெரிவித்திருந்தது. அதன் பின் அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள இப்பணிக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பதாரர்களுக்கு 17.04.2021 ம் தேதி TNPSC ஆணையம் இப்பதவிக்கான எழுத்து தேர்வுகளை நடத்தி முடித்தது. இந்த தேர்வு முடிவுகள் 29.09.2021 அன்று TNPSC அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியானது.

இதனை தொடர்ந்து இப்பதவிக்கான இரண்டாம் கட்ட நடவடிக்கையாக TNPSC ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவித்தது என்னவென்றால், வருகிற 04.04.2022 ம் தேதி அன்று உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) மற்றும் கலந்தாய்வு நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) மற்றும் கலந்தாய்வு தேர்வு முறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் , ஒட்டுமொத்த தரவரிசை எண் , இட ஒதுக்கீடு விதி மற்றும் காலிப்பணியிடங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக பட்டியல் ஆகியவற்றினை வெளியிட்டுள்ளது.

மேலும் மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் இடம், நேரம் குறித்து அழைப்புக்கடித்தத்தையும் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பித்து தேர்வுகளில் கலந்து கொண்டு காத்திருக்கும் தேர்வர்கள் இப்பதிவின் மூலம் உங்களுக்கு தேவையான விவரங்கள் மற்றும் இணைப்புகளை பெற்று பயனடைய கேட்டுக் கொள்கிறோம். தேர்வர்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் சரியாக சென்னை – 03, தேர்வாணைய சாலையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்திற்கு நேரில் தேவையான ஆவணங்களுடன் சென்று கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் தேவையான இணைப்புகள் இப்பதிவின் இறுதியில் கொடுத்துள்ளோம். தேர்வர்கள் இதன் மூலம் பயனடையலாம்.

TNPSC Certificate Verification Notification 2022

TNPSC Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!