TNPSC உதவி வனப்பாதுகாவலர் நுழைவு சீட்டு வெளியீடு – முழு விவரம் இங்கே!

0
TNPSC உதவி வனப்பாதுகாவலர் நுழைவு சீட்டு வெளியீடு – முழு விவரம் இங்கே!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உதவி வனப்பாதுகாவலர் தேர்வுக்கான நுழைவு சீட்டு தற்போது வெளியாகியுள்ளது.

நுழைவு சீட்டு:

தமிழக அரசின் கீழ் செயல்படும் வனத்துறையின் உதவி வனப்பாதுகாவலர் தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் அறிவிப்பு கடந்த 13.12.2022 ம் தேதி அன்று வெளியாகியது. இப்பணிகளுக்கு மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் 13.12.2022 முதல் 12.01.2023ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 19.01.2023ம் தேதி வரை தேர்வு கட்டணம் பெறப்பட்டது. முன்னதாக 30.04.2023 அன்று தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச் மாதம் தேர்வுகள் 03.05.2023ம் தேதி அன்று நடத்தப்படும் என்று மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு வனப்பணி (தொகுதி -IA பணிகளில்) உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலை கணினி வழித்தேர்வு முற்பகலில் மட்டும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தேர்வுக்கான நுழைவு சீட்டு அதன் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் தங்கள் ஒருமுறை பதிவேற்றம் மூலமாக (OTR Dashboard) மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DOWNLOAD TNPSC HALL TICKET
OFFICIAL NOTIFICATION

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!