TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆராய்ச்சி உதவியாளர் காலிப்பணியிடங்கள்!

0
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஆராய்ச்சி உதவியாளர் காலிப்பணியிடங்கள்!
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஆராய்ச்சி உதவியாளர் காலிப்பணியிடங்கள்!
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆராய்ச்சி உதவியாளர் காலிப்பணியிடங்கள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு 4க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் 22ம் தேதி தேர்வுகள் நடக்க உள்ளது.

ஆராய்ச்சி உதவியாளர்:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்கள் அனைத்தும் நிரபப்படுகின்றது. அரசு பணிகளின் நிலையை பொறுத்து தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித்தேர்வுகளின் விடைத்தாளானது ஓ.எம்.ஆர் முறைப்படி இருக்கும். நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவி வந்தது. இந்த பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்தது.

ஜனவரி 23 வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது – மாநில அரசு உத்தரவு!

நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் நடக்க வேண்டிய முக்கிய தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழக அரசின் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கொரோனா நோய் பரவல் பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து TNPSC தேர்வுகளை நடத்த ஆணையம் திட்டமிட்டிருந்தது. இதற்கான அறிவிப்புகளும் வரிசையாக வெளியிடப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி 22ம் தேதி நடக்க இருக்கும் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு 4க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்!

இந்நிலையில், தேர்வு பற்றி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 22ம் தேதி சனிக்கிழமையான காலை மற்றும் மாலை நடக்கிறது. இந்த தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் நுழைவு சீட்டுகளை அரசின் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!