TNPSCயில் ரூ.2,09,200/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
TNPSCயில் ரூ.2,09,200/- சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
TNPSCயில் ரூ.2,09,200/- சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
TNPSCயில் ரூ.2,09,200/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Account Officer, Class III பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பை முன்னதாக வெளியிட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு என மொத்தம் 23 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வேலைவாய்ப்பு விவரங்கள்:

TNPSC அறிவிப்பில் (Advertisement No. 618 Notification No. 14 /2022), தமிழ்நாடு மாநிலம் கருவூலங்கள் மற்றும் கணக்குகள் சேவை மையத்தில் காலியாக உள்ள Account Officer, Class III (Post Code No. 2093) பணிக்கு என மொத்தமாக 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் Institute of Chartered Accountants / Cost Accountants என்னும் கல்வி நிறுவனத்தில் Degree முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Exams Daily Mobile App Download

Account Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 32 வயது என TNPSC-ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு ஊழியர்களாக இருப்பின் 05 ஆண்டுகள், உடல் ஊனமுற்றவர்களுக்கு 10 ஆண்டுகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 18 ஆண்டுகள் வயது தளர்வும் தரப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

அரசு பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது Level 23 என்ற ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.56,900/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Account Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Computer Based Test ஆனது Paper 1 மற்றும் Paper II என இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளது. மேலும் இந்த தேர்வு 08.10.2022 அன்று நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 13.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!