TNPSC குரூப் 2/ 2A தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy ஆனது TNPSC தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் குரூப் 2/ 2A தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அதில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TNPSC குரூப் 2/ 2A ஆன்லைன் மாதிரி தேர்வு:
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழக அரசு துறைகளில் உருவாகும் காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த 2019ம் ஆண்டிற்கு பிறகு 2 வருடங்கள் ஆகியும் குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை. சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அதில் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் அடுத்த கட்டமாக தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
கொரோனா தாக்கம் குறைந்த காரணத்தால் இந்த ஆண்டின் இறுதியில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் தற்போது மழையின் காரணத்தால் பல்வேறு அரசு தேர்வு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் டிசம்பர் மாதம் நெருங்கும் நிலையில் பருவமழை தீவிரமடைவதால் குரூப் 2/ 2A தேர்வு அறிவிப்பு வெளியாக தாமதமாகவும் வாய்ப்புள்ளது. இருந்த போதிலும், தேர்வு நடைபெற உள்ளதை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் தகுதியானவர்கள் தற்போது முதல் அதற்காக படித்து வருகின்றனர்.
அவர்களை ஊக்குவிக்கவும் உதவிடவும் குரூப் 2/ 2A போட்டி தேர்வுகளை போலவே இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்படவுள்ளதாக Dexter Academy அறிவித்து உள்ளது. இந்த ஆன்லைன் மாதிரி தேர்வானது 02.12.2021 அதாவது நாளை காலை 10மணிக்கு நடைபெறவுள்ளது.இந்த தேர்வில் கலந்துகொள்வதற்கு முன்பதிவு செய்வது கட்டாயமானதாகும். ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொண்டு தங்களின் இந்த ஆன்லைன் தேர்வுகளில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
TNPSC குரூப் 2/ 2A Mock test Link Download
Mock Test “WhatsApp Group” Join Now