காலை 50 பேர் – மாலை 50 பேர் | ரேஷன் கடைகளில் ரூ. 1000 விநியோகம்

0
ரேஷன் கடைகளில் ரூ. 1000 விநியோகம்
ரேஷன் கடைகளில் ரூ. 1000 விநியோகம்

காலை 50 பேர் – மாலை  50 பேர் | ரேஷன் கடைகளில் ரூ. 1000 விநியோகம்

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் உலகெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். இதனால் வருமானமும் இல்லாமலேயே இருக்கின்றனர். இதனால் வேலைக்கு செல்ல இயலாத ரேஷன் அட்டைதாரருக்கு தமிழக அரசு ரூ 1000 நிதியுதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ 1000 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அது போல் ஏப்ரல் மாதம் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகியன இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ 1000 நிதியுதவி யாருக்கெல்லாம் வரும் என்பதை நாம் இணையத்தில் சோதனை செய்துக் கொள்ளலாம்.

உங்கள் மொபைலில் TNEPDS என்ற செயலியை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். இந்த செயலியினுள் சென்றால் செல்போன் எண்ணை கேட்கும். உங்கள் ரேஷன் கார்டில் எந்த எண் கொடுத்துள்ளீர்களோ அதை கொடுக்கவும். அதன் பின்னர் கீழே இருக்கும் கேப்ட்சாவை கொடுங்கள். அப்போது பதிவு செய் என்ற பட்டனை அழுத்துங்கள். அப்போது உங்களுக்கு ஒரு ஒன்டைம் பாஸ்வேர்டு (ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொல்) வரும். அதை கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் டைப் செய்துவிட்டு உள்நுழை என்ற பட்டனை அழுத்துங்கள்.

இதில் ஏராளமான தகவல்கள் வரும் அதில் “உரிமம்” என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் 1000 ரூ நிதித் தொகை என கொடுத்திருப்பார்கள். அதில் உரிம அளவு எனும் இடத்தில் ஒன்று என்ற எண் (1.000) இருந்தால் உங்களுக்கு நிவாரணம் உண்டு. மீத அளவு என்ற இடத்திலும் 1 என்ற எண் இருந்தால் நீங்கள் அந்த தொகையை வாங்கவில்லை என அர்த்தம். ஜீரோ என இருந்தால் நீங்கள் அதை வாங்கிவிட்டீர்கள் என்பது அர்த்தம்.

மேலும் பணப்பட்டுவாடா செய்யும் நேரத்தில் கூட்டம் கூடாமல் தடுக்க காலை 50 பேர்க்கு, மாலை 50 பேர்க்கு என விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!