தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு ரூ.58,600/- ஊதியத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு ரூ.58,600- ஊதியத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு ரூ.58,600- ஊதியத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு ரூ.58,600/- ஊதியத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

சென்னை மாவட்ட தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE Chennai) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள ஓதுவார் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ஓதுவார் பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் சமயம் அல்லது அரசு கல்வி நிறுவனங்களில் 3 ஆண்டு காலம் தேவாரம் பாடுவதில் பயிற்சி பெற்ற சான்றிதழ் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.08.2022 அன்றைய நாளின் படி, குறைந்த பட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 35 வயது எனவும் இந்து சமய அறநிலையத்துறையால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • ஓதுவார் பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு பணியின் போது Pay Matrix 22 என்ற ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.18,500/- முதல் அதிகபட்சம் ரூ.58,600/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழியில் நன்கு எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • இந்த அறநிலையத்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.09.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here