தமிழக அரசு மின்சார வாரியத்தில் 45000 காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு

0
தமிழக அரசு மின்சார வாரியத்தில் 45000 காலிப்பணியிடங்கள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு
தமிழக அரசு மின்சார வாரியத்தில் 45000 காலிப்பணியிடங்கள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு
தமிழக அரசு மின்சார வாரியத்தில் 45000 காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதில் தற்போது மின் வாரியத்தில் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

மின் வாரியம்

தமிழகத்தில் மாதந்தோறும் அனைத்து பகுதிகளிலும் உள்ள மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின்தடை அறிவிக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுவதால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவது குறைக்கப்படுகிறது. அதனால் இதனை மாதந்தோறும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின் வாரியத்தில் 45 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளது. அதனால் களப்பணியாளர்கள் மிகவும் பணிச்சுமையில் உள்ளதாக மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் உமாநாத் அவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்.

Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – ரூ.150க்குள் கிடைக்கும் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம்!

மேலும் இது தொடர்பாக மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் உமாநாத் அவர்கள் கூறியதாவது, தமிழக மின் வாரியத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 400 பணியாளர்கள் வரை பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் தற்போது 88 ஆயிரத்து 419 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளார்கள். இதனை தொடர்ந்து கள உதவியாளர் பணியிடத்தில் 23 ஆயிரம் காலிப்பணியிடங்களும், கம்பியாளர் பணியிடத்தில் 8 ஆயிரமும் காலிப்பணியிடங்களும், கணக்கீட்டாளர் பணியிடத்தில் 3400 காலிப்பணியிடங்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்புகள் – அகவிலைப்படி, சம்பள உயர்வு!

இதனால் களப்பணியாளர்கள் மிகவும் பணிச்சுமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இவர்களின் பணிச்சுமையை தவிர்க்கும் வகையில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் தினக்கூலி பணியாளர்களுக்கு தினமும் 380 ரூபாய் வழங்க வேண்டும். அத்துடன் மின்வாரிய பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து மின்வாரியத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் வழங்கப்பட உள்ள ஊதியம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here