அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்புகள் – அகவிலைப்படி, சம்பள உயர்வு!

0
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்புகள் - அகவிலைப்படி, சம்பள உயர்வு!
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்புகள் - அகவிலைப்படி, சம்பள உயர்வு!
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்புகள் – அகவிலைப்படி, சம்பள உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி நிலுவைத் தொகை, வீட்டு வாடகைப் படி உயர்வு, அடிப்படை சம்பள உயர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

அறிவிப்புகள்:

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2021 ஜூலை மாதம் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்வு அளித்தது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31%அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு முதல் மேலும் 2 அல்லது 3% அகவிலைப்படி உயர்த்தபடலாம் என்று தகவல் வந்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆதார் கார்டுடன், பான் எண்ணை இணைக்க முடியவில்லையா? முக்கிய காரணங்கள் இதோ!

மேலும் 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வருடம் அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி நிலுவை தொகை, வீட்டு வாடகைப்படி உயர்வு, அடிப்படை சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் மார்ச் மாதம் ஹோலி பண்டிகைக்கு முன்பாக சம்பள உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வந்துள்ளது. மேலும் fitment factor 2.57இல் இருந்து 3.68 ஆக உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர்.

கல்லூரிகளுக்கு பிப்ரவரி 15 வரை விடுமுறை நீட்டிப்பு – ஹிஜாப் விவகாரம்! அரசு அதிரடி உத்தரவு!

அதனை தொடர்ந்து 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையை வழங்க வலியுறுத்தி வந்த நிலையில் ஒரே தவணையாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அரசுத்துறை வட்டாரங்கள் கூறுகிறது. சுமார் 2 லட்சம் ரூபாய் வரை அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து வீட்டு வாடகைப் படி தொகையும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!