கல்லூரிகளுக்கு பிப்ரவரி 15 வரை விடுமுறை நீட்டிப்பு – ஹிஜாப் விவகாரம்! அரசு அதிரடி உத்தரவு!

0
கல்லூரிகளுக்கு பிப்ரவரி 15 வரை விடுமுறை நீட்டிப்பு - ஹிஜாப் விவகாரம்! அரசு அதிரடி உத்தரவு!
கல்லூரிகளுக்கு பிப்ரவரி 15 வரை விடுமுறை நீட்டிப்பு - ஹிஜாப் விவகாரம்! அரசு அதிரடி உத்தரவு!
கல்லூரிகளுக்கு பிப்ரவரி 15 வரை விடுமுறை நீட்டிப்பு – ஹிஜாப் விவகாரம்! அரசு அதிரடி உத்தரவு!

கர்நாடக அரசு PUC கல்லூரிகளுக்கு பிப்ரவரி 14 அன்று முதல் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பியு கல்லூரிகளுக்கு பிப்ரவரி 15 வரை விடுமுறையை நீட்டித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

விடுமுறை நீட்டிப்பு:

கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் உடுப்பியில் உள்ள அரசு முன் பல்கலைக்கழக கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி, உடுப்பியில் உள்ள அரசு PU மகளிர் கல்லூரியின் 6 முஸ்லீம் மாணவிகள், ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குள் வருவதை கல்லூரி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, Campus Front of India (CFI) தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு – அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இது தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அனைத்து மாணவர்களும், அவர்களின் மதம் மற்றும் நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல், காவி சால்வை, ஹிஜாப், மதக் கொடிகள் போன்றவற்றை வகுப்பறைகளுக்குள் அணிவதற்கு மறு உத்தரவு வரும் வரை தடை விதித்துள்ளது. முன்னதாக அனைத்து கல்வி நிலையங்களும் பிப்ரவரி 9 முதல் மூடப்பட்டது மற்றும் பிப்ரவரி 14 அன்று திறக்க திட்டமிடப்பட்டது. அரசு ஏற்கனவே டிகிரி மற்றும் டிப்ளமோ கல்லூரிகளை பிப்ரவரி 16 வரை மூட உத்தரவிட்டுள்ளது. தற்போது கர்நாடக அரசு பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்லூரிகளுக்கான விடுமுறையை பிப்ரவரி 15 வரை நீட்டித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவித்தொகை – மாநில முதல்வர் சூப்பர் அறிவிப்பு!

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் அவர்களின் அறிக்கையின் படி, பிப்ரவரி 14 முதல் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் ஹிஜாப் மற்றும் காவி சால்வை தொடர்பான விஷயம் பதற்றத்தையும், விரும்பத்தகாத சம்பவங்களையும் ஏற்படுத்தியது மற்றும் சில இடங்களில் வன்முறையாகவும் மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!