ரெடியா மக்களே.. தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் 5000 பேருக்கு வேலை – விரைவில் அறிவிப்பு!

0
ரெடியா மக்களே.. தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் 5000 பேருக்கு வேலை - விரைவில் அறிவிப்பு!
ரெடியா மக்களே.. தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் 5000 பேருக்கு வேலை - விரைவில் அறிவிப்பு!
ரெடியா மக்களே.. தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் 5000 பேருக்கு வேலை – விரைவில் அறிவிப்பு!

தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) ஆனது கேங்மேன் (Gangman – Trainee) பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் கீழ் மொத்தம் 5000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. TNEB TANGEDCO கடைசியாக 2019 ஆம் ஆண்டு Gangman வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது.

Follow our Instagram for more Latest Updates

கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக அடுத்து இது சம்மந்தப்பட்ட எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள்ளவராக இருக்கவேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும். ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பதவிக்கு விண்ணப்பக்க தகுதியானவர்கள். இந்த (Gangman – Trainee) பதவிக்கு தேர்வர்கள் உடற் தகுதி சோதனையில் பங்கேற்க வேண்டும்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத்தொகை? அரசுக்கு முக்கிய கோரிக்கை!

Exams Daily Mobile App Download

பின்னர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியானதும் எங்கள் வலைத்தளத்தில் இந்த வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட கூடுதல் விவரங்கள் தெரிவிக்கப்படும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!