தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் 2021 – வெளியீடு!

0
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் 2021 - வெளியீடு!
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் 2021 - வெளியீடு!
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் 2021 – வெளியீடு!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் தற்போது இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் உள்நுழைந்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

TNEA தரவரிசை பட்டியல்:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. அதன்பின் 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற தொடங்கியது. கொரோனா அச்சம் நிலவுவதால் மாணவர்கள் அரசின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கலை, அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து பொறியியல் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

1 முதல் 8ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு உத்தரவு!

இம்முறை 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. எனவே கல்லூரிகளில் சேர போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான தரவரிசை பட்டியல் தற்போது இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் http://tneaonline.org என்கிற இணைய பக்கத்தில் பதிவு எண் உள்ளிட்ட தகவல்களை உள்ளிட்டு உள்நுழைந்து விபரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CRPF படையில் 2439 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

மேலும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வருகிற செப்டம்பர் 15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறும். தமிழகம் முழுவதும் மொத்தம் 440 பொறியியல் கல்லூரிகளில் 1,51,870 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர் சேர்க்கையின் போது சமர்பிக்கப்பட்டும் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்யுமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!