TN TRB 2207 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வர்கள் கவனத்திற்கு !

0
TN TRB 2207 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்
TN TRB 2207 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

TN TRB 2207 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வர்கள் கவனத்திற்கு !

தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ ஆனது முதுகலை ஆசிரியர்‌ / உடற்கல்வி இயக்குநர்‌ தரம்‌-1 / கணினி பயிற்றுநர்‌ தரம்‌-1 ஆகிய பணிகளுக்கான நேரடி நியமனம்‌ செய்ய கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. தற்போது இதில் விண்ணப்பித்தவர்க்கான முக்கிய அறிவுரைகள் வெளியாகி உள்ளன. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு:
  1. ஒவ்வொரு பணிநாடுநர்களும்‌ தமிழகத்தில்‌ எந்த ஒரு பகுதியிலும்‌ கணினி வழி தேர்வினை எழுத தயாராக இருக்க வேண்டும்‌. உடல்‌ ஊனமுற்றோர்‌, கர்ப்பிணி பெண்கள்‌ மற்றும்‌ கடுமையான நோய்களால்‌ பாதிக்கப்பட்டோருக்கு மட்டுமே அதற்கான சான்றிதழ்‌ சரிபார்த்தப்பின்‌ அவர்களுக்கு அருகாமையில்‌ உள்ள தேர்வு மையங்கள்‌ ஒதுக்கப்படும்‌.
  2. ஒவ்வொரு பணி நாடுநர்களுக்கும்‌ தேர்வுக்கு 7 நாட்களுக்கு முன்பாக எந்த மாவட்டத்தில்‌ தேர்வு மையம்‌ ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும்‌ 3 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையத்தின்‌ விவரமும்‌ மினனஞ்சல்‌ மூலமாக மட்டுமே அனுப்பப்படும்‌.
தேர்வு மைய விவரங்கள்‌ :-
  • தேர்வு மைய விவரத்துடன்‌ கூடிய அனுமதிச்சீட்டு பணிநாடுநர்களுக்கு இணையவழியில்‌ மூலமாக மட்டுமே அனுப்பப்படும்‌.
  • எக்காரணம்‌ முன்னிட்டும்‌ தேர்வு மையத்தை மாற்றும்‌ கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

பணி நாடுநரின்‌ முறைகள்‌ :-

பணிநாடுநரின்‌ முதுகலை ஆசிரியர்‌ தேர்வுகள்‌ சார்ந்த எந்தவொரு சந்தேகங்களும்‌, கணினி வழி தேர்வில்‌ கேட்கப்படும்‌ கேள்விகள்‌ சார்ந்து விடைக்குறிப்பு ஆட்சேபணைகளும்‌ அதற்கென உருவாக்கப்பட்ட மின்னஞ்சல்‌ மூலமாக மட்டுமே ஆசிரியர்‌ தேர்வு வாரியத்திற்கு அனுப்பப்பட வேண்டும்‌. அஞ்சல்‌, பதிவஞ்சல்‌, நேரடியாக கொடுக்கப்படும்‌ விண்ணப்பங்கள்‌ மற்றும்‌ புலனம்‌ (Whattsapp) மூலமாக அனுப்பப்படும்‌ எந்தவொரு கோரிக்கையும்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

பொதுக்குறிப்பு :-
  • ஒவ்வொரு பணிநாடுநரும்‌ தான்‌ விண்ணப்பிக்கும்‌ பதவிக்கு உரிய கல்வித்தகுதியினை சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கும்‌ பொறுப்பு அவருக்கு மட்டுமே உண்டு என்பதை உணர வேண்டும்‌. மேலும்‌ கல்வித்தகுதி சார்ந்து மற்றும்‌ இதர சிறப்பு ஒதுக்கீடுகள்‌ சார்ந்து பணி நாடுநர்கள்‌ அளிக்கின்ற விவரங்களின்‌ / ஆவணங்களை நிரூபிக்கும்‌ பொறுப்பு பணிநாடுநரையே சாறும்‌ என்பது தெளிவுப்படுத்தப்படுகின்றது.
  • இணையவழி விண்ணப்பம்‌ அளிப்பதும்‌ மற்றும்‌ கணினி வழி தேர்வில்‌ பங்கு கொள்வதும்‌ ஆகிய காரணங்களுக்காக மட்டுமே ஒரு பணிநாடுநரின்‌ தெரிவினை சார்ந்து உரிமை கோர இயலாது. இந்நிகழ்விற்கு பின்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பின்‌ மூலம்‌ அவர்‌ முழு தகுதி பெற்றுள்ளாரா என்பதும்‌ சம்பந்தப்பட்ட இடஒதுக்கீட்டு பிரிவில்‌ தெரிவு செய்ய போதுமான மதிப்பெண்‌ பெற்றுள்ளாரா என்பது மட்டுமே தெரிவினை தீர்மானிக்கும்‌.
  • Cutoff மதிப்பெண்‌ இருந்தும்‌ விண்ணப்பித்த பதவிக்கான உரிய கல்வித்தகுதிகள்‌ இல்லை எனினும்‌ நிராகரிக்கப்படுவர்‌.
தேர்வினை இரத்து செய்தல்‌ :-

நிர்வாக காரணங்களுக்காகவோ, நோய்‌ தொற்று மற்றும்‌ பேரிடர்‌ சார்ந்த காரணங்களுக்காகவோ ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ நடத்தும்‌ தேர்வினை தள்ளி வைக்கவோ அல்லது இரத்து செய்யவோ ஆசிரியர்‌ தேர்வு வாரியத்திற்கு முழு உரிமை உண்டு என்பதை பணி நாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது.

பணி நாடுநர்களின்‌ ஒழுங்கின்மை :-

தேர்வு மையங்களில்‌ ஒழுங்கீன செயல்களில்‌ ஈடுபடும்‌ பணி நாடுநர்கள்‌ மற்றும்‌ சட்டம்‌ ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும்‌ விதமாக நடக்கும்‌ பணி நாடுநர்கள்‌ மீது கடுமையான குற்றவியல்‌ நடவடிக்கை எடுக்கப்படுவதோடு சார்ந்த பணி நாடுநர்கள்‌ 5 முதல்‌ 7 ஆண்டுகள்‌ வரை ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ நடத்தும்‌ எந்த வொரு தேர்வுகளிலும்‌ கலந்துகொள்ள துடை விதிக்கப்படும்‌ என்பதும்‌ தெரிவித்துக்கொள்ளப்படுகின்றது. மேலும்‌ ஆயுட்கால தடை விதிக்கவும்‌ ஏதுவாகும்‌ என்பதும்‌ தெரிவிக்கப்படுகின்றது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!