TN TRB SGT 2024 தேர்வுக்கு 1766 காலியிடங்கள் – Exam Pattern & Syllabus விவரங்கள் இதோ!  

0
TN TRB SGT 2024 தேர்வுக்கு 1766 காலியிடங்கள் - Exam Pattern & Syllabus விவரங்கள் இதோ!  

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TN TRB) 2024 ஆம் ஆண்டுக்கென நடத்தப்பட உள்ள TN TRB SGT தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு நடைபெறும் விதம் ஆகியவை மிகவும் எளிமையான முறையில் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் தேர்வர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TN TRB SGT 2024 தேர்வு விவரங்கள்:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TN TRB) ஆண்டுதோறும் நடத்தப்படும் TN TRB SGT தேர்வு மூலம் தமிழக அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டு வரும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள TN TRB SGT தேர்வுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 1766 காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது வருகின்ற ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்வுக்கு தங்களது தயார்படுத்திக் கொண்டு இருக்கும் தேர்வர்கள் பின்வரும் பாடத்திட்டம் குறித்த தகவலை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.    

TN TRB SGT 2024 தேர்வு முறை:

  • எழுத்து தேர்வு (Objective Type)
  • சான்றிதழ் சரிபார்ப்பு      

TN TRB SGT 2024 எழுத்து தேர்வு விவரங்கள்:

  • இந்த TN TRB SGT 2024 எழுத்து தேர்வானது கொள்குறி வினா வகை (Objective Type) தேர்வு முறையில் நடத்தப்படும்.
  • இத்தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு 03 மணி நேரம் நடைபெறும்.
  • TN TRB SGT 2024 எழுத்து தேர்வில் ஒரு வினாக்கு 01 மதிப்பெண் வீதம் மொத்தமாக 150 வினாக்கள் கேட்கப்படும்.
  • இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற விரும்பும் நபர்கள் குறைந்தது 30% முதல் 40% வரையிலான மதிப்பெண்களை பெறுவது போதுமானது ஆகும்.
TRB SGT Online ClassClick to Call

TN TRB SGT 2024 தேர்வு நடைபெறும் விதம்:

TN TRB SGT 2024 எழுத்துத் தேர்வில் கேட்கப்படும் 150 வினாக்கள் பின்வரும் முறைப்படி பிரிக்கப்பட்டுள்ளது.

TN TRB SGT 2024 Exam Pattern
தேர்வு முறை பாடப் பிரிவு வினாக்களின் எண்ணிக்கை

 

மொத்த மதிப்பெண்கள் கால நேரம் தேர்ச்சி சதவீதம்
 

கொள்குறி வினா வகை (Objective Type)

தமிழ் 30 30 03 மணி நேரம் BC, BCM, MBC/DNC, SC, SCA, ST – 30%

 

General – 40%

 

ஆங்கிலம் 30 30
கணிதம் 30 30
அறிவியில் 30 30
சமூக அறிவியல் 30 30
மொத்தம் 150 150 03 மணி நேரம்

TN TRB SGT 2024 தேர்வுக்கான பாடத்திட்டம்:

இத்தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு இருக்கும் தேர்வர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பாடத்திட்ட விதிமுறைக்குட்பட்ட 01ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத் திட்டங்களை பின்பற்ற வேண்டும்.

Download TN TRB SGT 2024 Exam Syllabus PDF

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!