சென்னை சேப்பாக்கத்தில் IPL 2024 இறுதி போட்டிகள் – குஷியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

0
சென்னை சேப்பாக்கத்தில் IPL 2024 இறுதி போட்டிகள்

நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் இறுதி போட்டிகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ஐபிஎல் இறுதிப்போட்டி:

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 17 சீசன்களாக மிகவும் வெற்றிகரமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. 20 ஓவர்களை கொண்ட இப்போட்டியில் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருப்பதால் அதிக அளவிலான ரசிகர்களை டி20 போட்டிகள் கொண்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 ஆம் தேதி அன்று மிகவும் கோலாகலமாக ஆர் சி பி VS சி எஸ் கே அணிகளுக்கிடையே நடந்தது. போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

DRDO ஆணையத்தில் Apprentices காலிப்பணியிடங்கள் 

முன்னதாக ஐபிஎல் போட்டிகளின் இரண்டாம் தொடர் துபாயில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே 26 ஆம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!