TN TRB தமிழக அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு – கல்வித்துறை சுற்றறிக்கை!

0
TN TRB தமிழக அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு - கல்வித்துறை சுற்றறிக்கை!
TN TRB தமிழக அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு - கல்வித்துறை சுற்றறிக்கை!
TN TRB தமிழக அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு – கல்வித்துறை சுற்றறிக்கை!

தமிழக அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தகுதியானவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பதவி உயர்வு:

தமிழகத்தில் கடந்த 2 வருடமாக பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் ஆசிரியர்களுக்கு நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு வருடங்களாக நடைபெறவில்லை. காலிப்பணியிடங்களும் பூர்த்தி செய்யப்படவில்லை. தற்போது பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்புவதால் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியது. இதனை பூர்த்தி செய்ய ஆசிரியர் தகுதி தேர்வுகளை நடத்த கோரிக்கைகள் எழுந்தது.

4 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல் – அரசு அதிரடி நடவடிக்கை!

இதனையடுத்து ஆசிரியர் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு விண்ணப்ப பதிவுகளும் நடைபெற்று முடிந்துள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவற்றிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மே முதல் வாரம் தேர்வுகள் துவக்கம்!

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி பெற்ற இடைநிலை, உடற்கல்விஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் விவரப் பட்டியலை ஜன.1-ம் தேதி நிலவரப்படி பாட வாரியாக பட்டியல் தயாரிக்க வேண்டும். இரட்டைப் பட்டம் பெற்றவர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள், புகார்கள் நிலுவையில் உள்ளவர்களை பரிந்துரைக்க கூடாது. என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 27 முதல் 30 வரை அந்தந்த மாவட்டங்களுக்கு பட்டியலை அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!