TN TRB 1060 காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு !

1
TN TRB 1060 காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு - தேர்வர்கள் கவனத்திற்கு !
TN TRB 1060 காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு - தேர்வர்கள் கவனத்திற்கு !
TN TRB 1060 காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு !

2017-2018 ஆம்‌ ஆண்டிற்குரிய அரசுப்‌ பல்தொழில்நுட்பக்‌ கல்லூரி விரிவுரையாளர்கள்‌ காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ 27.11.2019 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது (அறிவிக்கை எண்‌.14/2019, நாள்‌.27.11.2019). இவ்வறிவிக்கையின்படி விண்ணப்பதாரர்கள்‌ அவர்களுடைய விண்ணப்பத்தினை இணையவழியில்‌ (Online) பதிவேற்றம்‌ செய்ய தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும்‌, விண்ணப்பங்களுடன்‌ கல்வித்‌ தகுதிக்குரிய சான்றிதழ்களையும்‌ (Photo Copies) பதிவேற்றம்‌ செய்யத்‌ தெரிவிக்கப்பட்டது.

TN TRB கல்லூரி விரிவுரையாளர் பதிவேற்ற வேண்டிய சான்றிதழ்:

அரசுப்‌ பல்தொழில்நுட்பக்‌ கல்லூரி விரிவுரையாளர்கள்‌ தெரிவிற்கான தேர்வுகள்‌ 08.12.2021 முதல்‌ 12.12.2021 வரை கணினி வழியில்‌ (CBT) நடைபெற்றது. இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள்‌ வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள்‌ வெளியிடப்பட்ட நிலையில்‌ அடுத்தக்கட்டமாக சான்றிதழ்‌ சரிபார்ப்பு தொரடர்பான பணிகள்‌ மேற்கொள்ள வேண்டியுள்ளதால்‌ பணிநாடுநர்கள்‌ விண்ணப்பத்துடன்‌ ஏற்கனவே பதிவேற்றம்‌ செய்துள்ள கல்விச்‌ சான்றிதழ்களஞுடன்‌ கூடுதலாகக்‌ கீழ்க்காணும்‌ சான்றிதழ்களையும்‌ பதிவேற்றம்‌ (Photo Copies) செய்யக்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1.UG Degree or Provisional Certificate of UG.
2. UG Mark sheets or Statement of Marks.
3. Equivalence G.O. for UG Degree, if applicable.
4. PG Degree or Provisional Certificate of PG.
5. PG Mark sheets or Statement of Marks.
6. Equivalence G.O. for PG Degree, if applicable.
7. M.Phil. Degree or Provisional Certificate.
8. M.Phil. Mark sheets or Statement of Marks.
9. Equivalence G.O. for M.Phil, if applicable.
10. Ph.D Degree.
11. Equivalence G.O. for Ph.D, if applicable / Equivalence Certificate
obtained from Association of Indian Universities, New Delhi (If Ph.D
obtained from Foreign University).
12. Conduct Certificate from Head of the Institution (Last studied).
13. Latest Conduct Certificate from a Gazetted Officer.
14. Teaching Experience Certificate. (*)

சான்றிதழ் பதிவேற்றத்திற்கான கால அவகாசம்:

பணிநாடுநர்கள்‌ மேற்குறிப்பிட்ட சான்றிதழ்களை 11.03.2022லிருந்து 18.03.2022 ற்குள்‌ TRB Website-ல்‌ பதிவேற்றம்‌ செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களைப்‌ பதிவேற்றம்‌ செய்யாத விண்ணப்பதாரர்களின்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌ எனத்‌ திட்டவட்டமாகத்‌ தெரிவிக்கப்படுகிறது.

TN TRB எச்சரிக்கை:

விண்ணப்பதாரர்கள்‌ பதிவேற்றம்‌ செய்துள்ள சான்றிதழ்களின்‌ (Origina) சான்றிதழ்கள்‌ மட்டுமே சான்றிதழ்‌ சரிபார்ப்பின்‌ போது (Certificate verification) கூர்நீதாய்விற்கு எடுத்துக்‌ கொள்ளப்படும்‌. மேலும்‌, பதிவேற்றம்‌ செய்யப்படாத சான்றிதழ்கள்‌ அல்லது புதிய சான்றிதழ்கள்‌ அறிவிக்கை (Notification) 13 (c) -ல்‌ குறிப்பிட்டுள்ளவாறு சான்றிதழ்‌ சரிபார்ப்பின்‌ போது கூர்ந்தாய்விறகு எடுத்துக்‌ கொள்ளப்படமாட்டாது என திட்டவட்டமாகத்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது. மேலும்‌, முழுமையான விவரங்கள்‌ அளிக்கப்படாமல்‌ இருந்தாலோ அல்லது தவறான தகவல்களை அளித்திருந்தாலோ அவ்விண்ணப்பதாரர்களின்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌ எனத்‌ திட்டவட்டமாகத்‌ தெரிவிக்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

இவ்வறிவிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளவாறு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள்‌ உரிய சான்றிதழ்களைப்‌ பதிவேற்றம்‌ செய்யாத விண்ணப்பதாரர்களின்‌ விண்ணப்பங்களும்‌ நிராகரிக்கப்படும்‌ என திட்டவட்டமாகத்‌
தெரிவிக்கப்படுகிறது.

கூடுதல்‌ விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள்‌ கீழ்க்குறிப்பிட்டுள்ள் கைபேசி எண்கள்‌ வாயிலாகத்‌ தொடர்புகொள்ளலாம்‌.

1. 9444630068
2. 9444630028

மேலும்‌, எழுத்து மூலமாகத்‌ தொடர்புகொள்ள விரும்பு விண்ணப்பதாரர்கள்‌ கீழ்க்காணும்‌ மின்னஞ்சல்‌ முகவரி வாயிலாகத்‌ தொடர்புகொள்ளலாம்‌.

Click here for Additional Upload Documents

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. டிஆர்பி எக்ஸாம் இப்பதான் எழுதிட்டு வந்தோம் இப்போ மறுபடியும் சட்விகேட் அப்லோட் பண்ணனுமா எனக்கு கொஞ்சம் டீடைல் சொல்லுங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!