தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?- மூத்த கல்வித்துறை அதிகாரி விளக்கம்!!!

1
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?- மூத்த கல்வித்துறை அதிகாரி விளக்கம்!!!
கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்விநிலையங்கள் மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்த நிலையில் தற்போது டிசம்பர் 6-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்த அறிக்கையின் படி ஜனவரி மாதம் பொங்கல் கழித்த பின் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதாக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிவித்தார்.
பள்ளிகள் திறப்பு:

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் படங்கள் நடத்திவரும் நிலையில், வசதி இல்லாத அரசு மற்றும் அரசு உதவி பெரும் மாணவர்களுக்காக அரசு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் வருகிற ஜனவரி 4 முதல் பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளை திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது.

கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்துவரும் நிலையில் தற்போது இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 150 பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளிகள் ஜனவரி மாதம் திறக்கவிருந்த நிலையில் தேதி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது கொரோனா நோய் முற்றிலும் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பெற்றோர்கள் கருத்தின் அடிப்படையில் தான் தமிழக அரசு முடிவெடுக்கும் என தெரிவித்தார்.


இந்நிலையில் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய மூத்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,” முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளது, குறிப்பாக அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தில் பொங்கலுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும்.இருப்பினும், ஐ.ஐ.டி-மெட்ராஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழக வைரஸ் பரவலைப் பார்க்கும்போது, இயல்புநிலை வரும் வரை பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து  அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,04,650 ஆகவும், அதில் 7,82,915 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் நேர்மறை விகிதம் இரண்டு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. இதுகுறித்து சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் இரண்டு சதவீதத்திற்கும் குறைந்துள்ளது, அதே நேரத்தில் சென்னை 3.5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக தெரிவிக்கிறது, ஆனால் நோய் குறையும் நேரத்தில் தான் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தடுப்பூசி கிடைக்கும்போது  அனைத்து மக்களுக்கும் உடனடியாக தடுப்பூசி போடப்படாது, முன்னுரிமை அடிப்படையில் முதலில் சுகாதார ஊழியர்கள், காவல்துறை ஊழியர்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் என தெரிவித்தார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!