புதிய கல்வியாண்டில் 30 % பாடங்கள் குறையும் !!!!!

0
புதிய கல்வியாண்டில் 30 % பாடங்கள் குறையும் !!!!!
புதிய கல்வியாண்டில் 30 % பாடங்கள் குறையும் !!!!!

புதிய கல்வியாண்டில் 30 % பாடங்கள் குறையும் !!!!!

தமிழகத்தில் புதிய கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவறைகளுக்கு 30 % பாடங்கள் குறைக்கப்படும் என தெரிகிறது. அதாவது இந்த புதிய கல்வியாண்டில் பாடங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தமிழக்தில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடத்திலும் 30 % வரை குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆசிரியர்கள், பாடநூல் எழுத்தாளர்கள் மற்றும் மாவட்ட கல்வி நிலைய உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் எந்தெந்த பாடங்களை குறைக்கலாம் என்பது பற்றி பரிந்துரை செய்வார்கள். ஒவ்வொரு பாடத்திலும் முக்கியத்துவம் இல்லாத பகுதிகளை நீக்குவதன் மூலமே இது செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 22 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் – பள்ளிகள் திறப்பு எப்போது ?

ஒவ்வொரு பாடத்தையும் ஆய்வு செய்து குறைப்பதற்கென்றே 100 ஆசிரியரை வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களின் பரிந்துரைகளை ஜூன் 3 ஆவது வாரத்திற்குள் கல்வித்துறையிடம் சமர்ப்பிப்பார்கள் என தெரிகிறது.

ஆனால் பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளன. இதனால் முழு பாடத்திட்டமும் அவற்றில் அடங்கும். எனவே தேவை இல்லாத பாடக்குறிப்புகள் எவை என்பது பின்னர் அறிவிக்கப்படும். எனவே அந்த பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளை ஆசிரியர்கள் நடத்துவார்கள்.

மேலும் வரும் ஜூன் 22 முதல் பாடபுத்தகங்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!