தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக ஊக்க 38926 கிராமின் டக் சேவக பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் மக்கள் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களின் வேலை வாய்ப்புகளை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். அதனால் எப்போது ஊரடங்கு தளர்த்தப்படும் என்று எதிர்பார்த்து வந்தனர். அப்போது கொரோனா பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அனைத்து துறைகளும் காலிப்பணியிடங்களை வெளியிட்டு வந்தது. மற்ற துறைகளை தொடர்ந்து தற்போது அஞ்சல் துறை 38926 கிராமின் டக் சேவக பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? 25% ஓய்வூதியம்! அரசு எடுக்கப்போகும் முடிவு!

இப்பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST, BC பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் indiapostgdsonline.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். SC , ST மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

மேலும் கிரெடிட் /டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமாக கட்டணத்தை எளிதாக செலுத்தலாம். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது தங்களது கல்வி சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் பணிக்கு 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நபர்கள்தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு ஊதியமாக 10,000 முதல் 12,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!