தமிழக தபால் துறையில் 4300+ காலிப்பணியிடங்கள் – 10 வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

2
தமிழக தபால் துறையில் 4300+ காலிப்பணியிடங்கள் - 10 வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்...!
தமிழக தபால் துறையில் 4300+ காலிப்பணியிடங்கள் - 10 வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்...!
தமிழக தபால் துறையில் 4300+ காலிப்பணியிடங்கள் – 10 வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

தற்போது தமிழக அஞ்சல் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Gramin Dak Sevaks (GDS) பணிக்கு என்று மொத்தமாக 4300+ காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamilnadu Post Office
பணியின் பெயர் Gramin Dak Sevaks (GDS)
பணியிடங்கள் 4310
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TN Post Office காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசின் கீழ் செய்யப்பட்டு வரும் தமிழக அஞ்சல் துறையில் தற்போது Gramin Dak Sevaks (GDS) பணிக்கு என்று 4310 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

TNPSC Coaching Center Join Now

GDS Job கல்வித் தகுதி:

Gramin Dak Sevaks (GDS) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Mathematics மற்றும் English பாடப்பிரிவில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TN Post Office வயது வரம்பு:

Gramin Dak Sevaks (GDS) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயதாக 18 வயது என்றும், அதிகபட்ச வயதாக 40 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

GDS Job ஊதிய தொகை:

Gramin Dak Sevaks (GDS) பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay Matrix Level 1 – Level 2 as per 7th CPC என்கிற மத்திய அரசு ஊதிய அளவின்படி, மாத ஊதியம் அளிக்கப்படும்.

TN Post Office தேர்வு முறை:

Gramin Dak Sevaks (GDS) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் (Merit List) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள், அதன் பின் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) நடைபெறும் என்றும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

GDS Job விண்ணப்பிக்க கட்டணம்:

SC / ST / PwD / Trans Women மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது என்றும், இவர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- மட்டும் விண்ணப்பிக்க கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
TN Post Office விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 05.06.2022 ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!