தமிழக NEET UG 2ம் கட்ட இட ஒதுக்கீடு முடிவுகள் – இன்று வெளியீடு || முக்கிய விவரங்கள் இதோ!

0
தமிழக NEET UG 2ம் கட்ட இட ஒதுக்கீடு முடிவுகள் - இன்று வெளியீடு || முக்கிய விவரங்கள் இதோ!
தமிழக NEET UG 2ம் கட்ட இட ஒதுக்கீடு முடிவுகள் - இன்று வெளியீடு || முக்கிய விவரங்கள் இதோ!
தமிழக NEET UG 2ம் கட்ட இட ஒதுக்கீடு முடிவுகள் – இன்று வெளியீடு || முக்கிய விவரங்கள் இதோ!

தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கான நீட் இரண்டாம் கட்ட இட ஒதுக்கீடு முடிவுகள் ஆகஸ்ட் 31-ஆம் தேதியான இன்று வெளியிடப்பட உள்ளதாக தமிழ்நாடு தேர்வு குழு தகவல் வெளியிட்டுள்ளது.

இட ஒதுக்கீடு முடிவுகள்:

தமிழகத்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வுகள் நடந்து வரும் நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு இட ஒதுக்கீடு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளதாக தமிழக மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இட ஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரர்கள் tnmedicalselection.net ல் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும் செப்டம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை தற்காலிக இட ஒதுக்கீடு கடிதத்தை பதிவிறக்கம் செய்து ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் செப்டம்பர் 4ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் பட்டியல் – மீண்டும் வாய்ப்பு அளிக்கும் அரசு! முழு விவரம்!

விண்ணப்பதாரர்கள் தற்காலிக இட ஒதுக்கீடு கடிதத்தை பதிவிறக்கம் செய்வதற்கு ஆணையம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும் சுயநிதி கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் சேர்க்கையின் போது நேரடியாக கல்லூரிகளில் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட கல்லூரிக்கு செல்லும்போது தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!