தமிழகத்தில் 2021 ம் ஆண்டு 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு நுழைவு சீட்டு வெளியீடு – அரசுத் தேர்வுகள் துறை அறிவிப்பு!

0
தமிழகத்தில் 2021 ம் ஆண்டு 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு நுழைவு சீட்டு வெளியீடு - அரசுத் தேர்வுகள் துறை அறிவிப்பு!
தமிழகத்தில் 2021 ம் ஆண்டு 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு நுழைவு சீட்டு வெளியீடு - அரசுத் தேர்வுகள் துறை அறிவிப்பு!
தமிழகத்தில் 2021 ம் ஆண்டு 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு நுழைவு சீட்டு வெளியீடு – அரசுத் தேர்வுகள் துறை அறிவிப்பு!

தமிழகத்தில் 2021ம் ஆண்டுக்கான 10 மற்றும் 11ம் வகுப்பு துணைத்தேர்வு மாணவர்களுக்கான நுழைவுசீட்டு நாளை (செப்டம்பர் 8) காலை வெளியிட இருப்பதாக தமிழக அரசுத் தேர்வுகள் துறை இயக்கம் அறிவித்துள்ளது.

துணைத்தேர்வுகள்:

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் 10,11 மற்றும்12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. பின்னர், அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. மேலும், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு உள்மதிப்பீடு முறையில் அரசு மதிப்பெண்களை வழங்க முடிவு செய்து, அதன்படி, கடந்த மாதம் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அரசு வழங்கிய மதிப்பெண்களின் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு மீண்டும் துணைத்தேர்வுகளில் வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘ரோஜா’ சீரியல் வரை இன்றைய ப்ரோமா – ரசிகர்களின் கமெண்டுகள்!

இந்நிலையில், தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு துணைத்தேர்வு மற்றும் தனித்தேர்வர்களுக்கான தேர்வு மைய நுழைவு சீட்டு நாளை காலை வெளியிட இருப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 2021 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) 08.09.2021 (புதன்கிழமை) காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகத் தேர்வு மைய நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டிய தனித் தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்திலேயே 13.09.2021 மற்றும் 14.09.2021 ஆகிய இரு நாட்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும். தனித்தேர்வர்கள் தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியரிடம் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வர்களுக்கு உரிய நுழைவு சீட்டு இல்லாமல் தேர்வெழுத அனுமதி இல்லை என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்யும் முறை:

  • நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்வதற்கு மாணவர்கள் முதலில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின்னர், அதில் HALLTICKET என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது 10ம் வகுப்பு துணைத்தேர்வு மாணவர்கள், ‘SSLC SUPPL. EXAMINATION SEPTEMBER 2021 – HALL TICKET DOWNLOAD’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • 11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான நுழைவு சீட்டினை பெற இருக்கும் மாணவர்கள், ‘HSE FIRST YEAR SUPPL. EXAMINATION SEPTEMBER 2021 – HALL TICKET DOWNLOAD’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, உங்கள் விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தேர்வு மையத்தின் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!