‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘ரோஜா’ சீரியல் வரை இன்றைய ப்ரோமா – ரசிகர்களின் கமெண்டுகள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் 'ரோஜா' சீரியல் வரை இன்றைய ப்ரோமா - ரசிகர்களின் கமெண்டுகள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் 'ரோஜா' சீரியல் வரை இன்றைய ப்ரோமா - ரசிகர்களின் கமெண்டுகள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘ரோஜா’ சீரியல் வரை இன்றைய ப்ரோமா – ரசிகர்களின் கமெண்டுகள்!

தினசரி சீரியல்களுக்கான ப்ரோமோவையும் அதற்கான டாப் கமெண்டுகளையும் நாம் பார்த்து வரும் வகையில், இன்றைய ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் அளித்துள்ள கமெண்டுகளை இந்த பதிவில் காண்போம்.

முக்கிய சீரியல்கள்:

சினத்திரையில் எத்தனை சேனல்கள் இருந்தாலும் சீரியல் ஹிட் ஆகி ரசிகர்கள் மனதை கவர்வது என்னமோ.. விஜய் டிவி மற்றும் சன்டிவி தான். மற்ற சேனல்களின் சீரியல்கள் என்ன தான் தனக்கென ரசிகர்களை இழுத்தாலும் ஹிட் வரிசையின் பின்னால் தான் உள்ளது. தற்போதைய கால கட்டத்தில் அனைத்து வயதினரும் சீரியல் பார்க்க தொடங்கி விட்டனர். இதனால் ப்ரோமோக்கள் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பப்பட்டு வருகிறது. ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் அளித்து வரும் கமெண்டுகளுக்கு அதிக வரவேற்பு தற்போது உள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: மீண்டும் முதலிடத்தை பிடித்தது இந்தியா!!

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்குட்டி கண்ணன் வேலை தேடி கடைகடையாக ஏறி இறங்கி வருவது போலவும், ஐஸ்வர்யாவிடம் சமாளிப்பது போலவும் காட்சிகள் உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நல்லாத்தான போய்கிட்டு இருந்துச்சு அதுக்குள்ள ஏன் இப்படி பண்ணீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஏம்பா வீட்ட விட்டு வெளியேறி வந்து சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறப்ப அந்தம்மா எப்ப பார்த்தாலும் மேக்கப்-லயே இருக்கு? கொஞ்சமாவது லாஜிக்கா போடுங்கப்பா… என கூறியுள்ளார். கண்ணன் வீட்டை விட்டு வந்து ரெண்டு வாரம் ஆச்சு இன்னும் ஒரு வேலைக்கு கூட போகல வேலைக்கு முயற்சியும் பண்ணல. சாப்பாட்டுக்கே கஷ்டம் எப்போதான் கண்ணன் வேலைக்கு போவான் என்று கேட்டுள்ளார்.

தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பாக்யலட்சுமி:

இனியாவின் பள்ளி விழாவில் கலந்து கொண்டு நடனமாடி, சிறந்த பதில்களை அளித்து பாக்கியா போட்டியில் சிறந்த அம்மாவாக வென்று விடுகிறார். இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அந்த புது புடவையை கட்டிட்டு வந்திருந்தால் இன்னும் சூப்பரான சீன் ஆகிருக்கும் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஒருவர் இந்த இடத்தில் தலைவன் கோபி வந்தா வேற லெவலா இருக்கும் என கூறியுள்ளார். பிள்ளைகளுக்காக தன்னை அர்ப்பணித்த அத்தனை தாய் மாறுதலுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. என பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அம்மாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் நடக்கும் காட்சிகள் ப்ரோமோவாக வந்துள்ளது. இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வானத்தைபோல என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சூப்பர் சீன் என்று பதிவிட்டுள்ளார். இது எல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சூப்பர் என்றே கருத்துக்களை கூறியுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

ராஜா ராணி 2:

சந்தியா தோரணம் கட்டும் போது தவறி விழ அவரை சரவணன் தாங்கி பிடிப்பது போல் காட்சிகள் உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இதெல்லாம் நல்லா பண்ணுங்கள் ஆன சந்தேக புத்தி மட்டும் போகவே போகாது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படியே போனா நல்லாத்தான் இருக்கும் ஆனா அப்படி பண்ணமாட்டீங்களே என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீரியல் விறுவிறுப்பை இழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

ரோஜா:

ரோஜா செய்ய இருக்கும் பரிகார பூஜையை தானும் செய்ய இருப்பதாக அனு சொல்வது போல இன்றைய ப்ரோமோ உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எங்கள பாத்தா இவனுங்களுக்கு எப்படி தெரியுது போதும் டா சாமி ஆள் விடுங்க என கூறியுள்ளார். நாடகத்தில் பரிகாரம் இருக்கலாம். ஆனால் பரிகாரமே, நாடகமா இருந்தால் எப்படி? கதை இல்லாம பரிகாரம் மட்டுமே ஒரு 500 எரிசோடு ஓடியிருக்கும் என கூறியுள்ளார். பூஜை பரிகாரம் இன்னும் என்னன்னலாம் நடக்கும்போதே கடைசியில் அர்ஜுன் ரோஜாவுக்கு எதிராகத்தான் இருக்கும் அனுவுக்கு சாதகமாக முடித்துவைபார் நம்ப டைரக்டர் என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!