தமிழக சுற்றுலா தலங்கள் மூடல் & புதிய கட்டுப்பாடுகள் – நாளை முதல் அமல்!!

0
தமிழக சுற்றுலா தலங்கள் மூடல் & புதிய கட்டுப்பாடுகள் - நாளை முதல் அமல்!!
தமிழக சுற்றுலா தலங்கள் மூடல் & புதிய கட்டுப்பாடுகள் - நாளை முதல் அமல்!! தமிழக சுற்றுலா தலங்கள் மூடல் & புதிய கட்டுப்பாடுகள் - நாளை முதல் அமல்!!
தமிழக சுற்றுலா தலங்கள் மூடல் & புதிய கட்டுப்பாடுகள் – நாளை முதல் அமல்!!

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் அரசு பொது மக்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

இரவு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகமாக பரவி வந்த காரணத்தால் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 20ம் தேதியான நாளை முதல் இரவு 10 மணி தொடங்கி காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அம்பலப்படுத்தப்பட உள்ளது. மேலும், வார இறுதி நாளான ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நாட்களில் மக்களுக்கான பொதுவான புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

பொது கட்டுப்பாடுகள்:

  • நீலகிரி மாவட்டம்‌, கொடைக்கானல்‌, ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத்‌ தலங்களுக்கு, உள்ளூர்‌ மற்றும்‌ வெளியூர்‌ சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும்‌ தடை விதிக்கப்படுகிறது.
  • தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும்‌, அனைத்து நாட்களிலும்‌, பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
  • பூங்காக்கள்‌, உயிரியல்‌ பூங்காக்கள்‌ மற்றும்‌ தொல்லியல்‌ துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள்‌, அகழ்வைப்பகங்கள்‌ மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும்‌ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
  • தகவல்‌ தொழில்நுட்பம்‌ மற்றும்‌ தகவல்‌ தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில்‌ குறைந்தபட்சம்‌ 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல் – என்னென்ன கட்டுப்பாடுகள்?

  • நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, தேநீர்‌ கடைகள்‌, உணவு விடுதிகள்‌, காய்கறி கடைகள்‌, பலசரக்கு கடைகள்‌ உட்பட அனைத்து கடைகளும்‌, வணிக வளாகங்கள்‌ அனைத்து ஷோரூம்கள்‌ மற்றும்‌ பெரிய கடைகள் ‌ஒரே நேரத்தில்‌ 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன்‌, இரவு 9.00 மணி வரைமட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • கொரோனா நோய்த்‌ தொற்று அதிகரித்து வருவதைக்‌ கருத்தில் கொண்டு, மதம்‌ சார்ந்த திருவிழாக்கள்‌ மற்றும்‌ கூட்டங்களுக்கு 10.4.2021 முதல்‌ தடைவிதிக்கப்பட்டுள்ள்‌ நிலையில்‌, ஏற்கனவே குடமுழுக்கு / திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் ‌/ இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள்‌ செய்திருந்தாலோ, கோயில் பணியாளர்கள்‌, கோயில்‌ நிர்வாகத்தினருடன்‌ பொதுமக்கள்‌ 50 நபர்களுக்கு மிகாமல்‌ கலந்துகொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

  • கொரோனா தொற்றை கருத்தில்‌ கொண்டு, புதிதாக குடமுழுக்கு/திருவிழாக்கள்‌ நடத்துவதை சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகள்‌, தற்காலிகமாக ஒத்திவைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்‌. அத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய சூழ்நிலையில்‌ அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
  • தேவையான உள்கட்டமைப்பு மற்றும்‌ மருத்துவ வசதிகள்‌ உடைய தனியார்‌ மருத்துவமனைகளுடன்‌, விருப்பப்படும்‌ தங்கும்‌ விடுதிகள் இணைந்து கோவிட்‌ பாதுகாப்பு மையங்களாக ‌ செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை சுகாதாரத்துறை ஆய்வு செய்து, தேவைப்படும்‌ அனுமதியை வழங்கலாம்‌.
    இத்தங்கும்‌ விடுதிகளில்‌ பிற வாடிக்கையாளர்களை தங்க வைக்கக்கூடாது.
  • நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, திருமண நிகழ்வுகளில்‌ 100 நபர்களுக்கு மிகாமல்‌ கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்‌, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம்‌ அணிவது, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பன்‌ கொண்டு கைகளை சுத்தம்‌ செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல்‌ பின்பற்ற திருமண மண்டப நிர்வாகம்‌ உறுதி செய்ய வேண்டும்‌. தவறும்‌ பட்சத்தில்‌, மண்டப உரிமையாளர்‌ மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‌.

இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு – கொரோனா பரவல் எதிரொலி!!

  • நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள்‌ அனுமதிக்கப்பட்ட நிலையில்‌, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம்‌ அணிவது, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பன்‌ கொண்டு கைகளை சுத்தம்‌ செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல்‌ பின்பற்றுவதை திரையரங்க நிர்வாகம்‌ உறுதி செய்ய வேண்டும்‌. தவறும்‌ பட்சத்தில்‌, திரையரங்க உரிமையாளர்‌ மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‌.
  • நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, உணவகங்கள் மற்றும்‌ தேநீர்‌ கடைகளில்‌ 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில்‌, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம்‌ அணிவது, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான்‌ கொண்டு கைகளை சுத்தம்‌ செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல்‌ பின்பற்றுவதை உணவக தேநீர்‌ கடை உரிமையாளர்கள்‌ உறுதி செய்ய வேண்டும்‌.
  • கொரோனா நோய்த்தொற்று பரவாமல்‌ இருக்க ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்‌ தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க மாவட்டம்‌ தோறும்‌ சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்‌. கொரோனா நோய்த்தொற்று சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள்‌ நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள்‌ மீது கடும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!