தமிழகத்தில் ஒரே நாளில் 10,941 பேருக்கு கொரோனா உறுதி – 44 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தினசரி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை தவறாது பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் நாளை (ஏப்ரல் 20) முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10,941 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,02,392 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 44 பேர் உயிரிழந்து உள்ளதால், பலி எண்ணிக்கையும் 13,157 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி 6,172 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 9,14,119 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 3,347 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல் – என்னென்ன கட்டுப்பாடுகள்?
தமிழகத்தில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 75,116 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 1,09,533 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.