EB கட்டண விவரங்கள் உடனுக்குடன் – தமிழக மின்வாரிய நடவடிக்கை!

0
EB கட்டண விவரங்கள் உடனுக்குடன் - தமிழக மின்வாரிய நடவடிக்கை!

தமிழக மின்வாரியம் ஆனது தொடர்ந்து பல்வேறு நவீன நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில் புதிதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மின் கட்டண விவரங்கள்:

தமிழ்நாடு மின்வாரியத்தின் களப்பணியாளர்கள் குறிப்பிட்ட தேதியில் வந்து மீட்டரில் மின் கணக்கீடு பணிகளை மேற்கொள்கின்றனர். இதன் பின்னர் இணையதளங்களில் இந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து நுகர்வோரின் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக மின் கட்டண விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உடனுக்குடன் மின்கட்டண விவரங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புதிய மொபைல் செயலியை தமிழக மின்வாரியம் அறிமுகம் செய்ய உள்ளது. இதன்படி மின் கணக்கீடு எடுத்தவுடன் உடனடியாக பயனர்கள் தங்களின் மின்கட்டண விபரத்தை அறிந்து கொள்ள முடியும்.

TNPSC குரூப் 4 தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா? இதை கண்டிப்பாக படிங்க!!

இதே போல் பாரத் பில் பே வாயிலாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தவும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பயனர்கள் தங்களின் முந்தைய மாதங்களுக்கான மின் கட்டண ரசீதுகளை பெற உதவும் வகையில் வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக ‘tnebnet.org/. என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பயனர்கள் தங்களின் மின் இணைப்பு எண், ரசீது எண், தேதியை பதிவிட்டு தங்களுக்கு தேவையான ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!