முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள் – இன்றைய சட்டப்பேரவை கூட்டம்!

0
முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள் - இன்றைய சட்டப்பேரவை கூட்டம்!
முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள் - இன்றைய சட்டப்பேரவை கூட்டம்!
முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள் – இன்றைய சட்டப்பேரவை கூட்டம்!

இன்று தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கூறியுள்ளார்.

முதல்வர் அறிவிப்பு:

தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்து உரையாற்றினார். மறுநாள் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து துறை சார்ந்த விவாதம் நடைபெற்று வந்த நிலையில் தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இன்று அவர் கூறியதாவது, கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது. சங்க கால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது. அகழாய்வு பணிகளை மத்திய அரசு பாதியில் கைவிட்டது. அங்கு 4ம் நூற்றாண்டை சேர்ந்த வெள்ளிக்காசு கண்டறியப்பட்டு உள்ளது. கீழடி நாகரிகம் 6ம் நூற்றாண்டு நாகரீகம் என தெரிய வந்துள்ளது.

அகழாய்வு பணிகளுக்கு ஏற்கனவே 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அகழாய்வு நடக்கும் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி ஏற்கனவே கண்டறியப்பட்டு உள்ளது. கொற்கை துறைமுகம் கி.மு.6-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நெல்லை நகரில் ரூ.15 கோடியில் நவீன வசதிகளுடன் ”பொருநை” தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும். பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகள் பழமையானது என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் அக்.4ம் தேதி மாநிலங்களவை தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் எழுதப்பட வேண்டும். கேரள மாநிலம் பட்டணம் ஆந்திரா வேங்கி, ஒடிசாவின் பாலூர், கர்நாடகாவில் தலைக்காடு உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளில் ஆய்வு செய்வோம். இந்தோனேஷியா, தாய்லாந்து மலேசியா, வியட்நாம் நாடுகளில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளப்படும். தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை தேடி உலகெங்கும் பயணம் செய்வோம். இதனை சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் வழி நின்று நிறுவுவதே இந்த அரசின் லட்சியம் என அவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!