தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள செப்டம்பர் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலின் படி, இம்மாதத்தில் வரவிருக்கும் 20 நாட்களில் கிட்டத்தட்ட 10 நாட்கள் வரை வங்கிகள் செயல்படாது என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

வங்கிகள் விடுமுறை

பொதுவாக இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களை அந்த ஆண்டு துவக்கத்திலேயே இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவிக்கும். அந்த பட்டியலின் படி ஒவ்வொரு மாதமும் விடுமுறை நாட்கள் கடைபிடிக்கப்படுவது உண்டு. அதன் கீழ் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை RBI ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் ஆறு நாட்கள் வரை அனைத்து வங்கிகளுக்குமான அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செப்.13ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

இது தவிர, ஐந்து நாட்கள் வரை வார இறுதி விடுமுறைகளும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தவிர்த்து சில மாநிலங்களில் கொண்டாடப்படும் சிறப்பு பண்டிகையை முன்னிட்டு அந்தந்த மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் கீழ் செப்டம்பர் மாதத்தில் மீதமுள்ள 20 நாட்களில் 10 நாட்கள் வரை வங்கிகளின் வேலை நிறுத்த நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை நாளை (செப்டம்பர் 10) விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி வங்கிகள் செயல்படாது என்பதால் செப்டம்பர் 11, 12 ஆகிய 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் மீதமுள்ள விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டு தங்களது சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  • செப்டம்பர் 9 ஆம் தேதி – தீஜ் தினத்தை முன்னிட்டு கேங்டாக் பகுதிகளில் வங்கிகள் செயல்படாது.
  • செப்டம்பர் 10 – விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர், பனாஜி ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும்.
  • செப்டம்பர் 11 – இரண்டாவது சனிக்கிழமை, விடுமுறை நாள்.
  • செப்டம்பர் 12 – ஞாயிறு, பொது விடுமுறை.
  • செப்டம்பர் 17 – கர்ம பூஜையையொட்டி ராஞ்சியில் வங்கிகளுக்கு விடுமுறை.

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு 261 சிறப்பு ரயில்கள் – ஒன்றிய ரயில்வே அறிவிப்பு!

  • செப்டம்பர் 19 – ஞாயிறு, பொது விடுமுறை.
  • செப்டம்பர் 20 – இந்திரஜத்ரா தினத்தை முன்னிட்டு கேங்டாக் பகுதியில் வங்கிகள் செயல்படாது.
  • செப்டம்பர் 21 – ஸ்ரீ நாராயண குரு சமாதி நாளை தொடர்ந்து கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் இயங்காது.
  • செப்டம்பர் 25 – நான்காவது சனிக்கிழமை, விடுமுறை நாள்.
  • செப்டம்பர் 26 – ஞாயிறு, பொது விடுமுறை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here