TN தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு !

0
TN 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2022
TN 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2022
TN தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு !

Live Update:

10:00 AM – பிளஸ் 2 தேர்வு முடிவை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவை வெளியிட்டார். ஜூன் 24 ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

9:55 AM – பிளஸ் 2 தேர்வில் 93.7% பேர் தேர்ச்சி. மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். 10 ஆம் வகுப்பில் 90.07% பேர் தேர்ச்சி !

9:52 AM – பிளஸ் +2 தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளியிட உள்ளார்.

9:30 AM: +2 தேர்வு முடிவுகள் ஜூன் 20 திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஜூன் 16 ஆம் தேதி வெளியான அறிவிப்பின் படி, 2022ம் கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 20) வெளியானது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN 12th Result 2022 :

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா பெரும் தொற்று காரணமாக, கடந்த இரண்டு வருடங்களும் பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால், பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமோ? இல்லையோ? என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் நிலவியது. இந்த சமயத்தில் கட்டாயம் பொது தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து 10 ,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் இறுதியில் நிறைவடைந்தது.

தேர்வுகள் முடிந்து மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்த நிலையில், ஜூன் 16 ஆம் தேதி அன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன் படி, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20 திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20 நண்பகல் 12 மணிக்கும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tnresults.nic.in/http://www.dge1.tn.nic.in/http://www.dge2.tn.nic.in/https://www.dge.tn.gov.in/ ஆகிய இணைய தளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

அது மட்டும் அல்லாமல், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TN 10th Result

Download TN 12th Result 2022 – Out 

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!