தமிழகத்தில் ஜூலை 19 காலை 11 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

1
தமிழகத்தில் ஜூலை 19 காலை 11 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூலை 19 காலை 11 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூலை 19 காலை 11 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

TN 12th Result Date 2021  – Released. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கான முடிவுகள் வருகிற ஜூலை 19ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேர்வு முடிவுகள்:

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்ததை கருத்தில் கொண்டு மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டன. CBSE கல்வி வாரியமும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை ரத்து செய்தது. மதிப்பீடு முறைப்படி மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை பின்பற்றி மாநில அரசுகளும் தேர்வுகளை ரத்து செய்தன.

CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் கால தாமதம் – மதிப்பீட்டில் தேக்கம்!

தமிழக அரசும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டது. பிளஸ் 2 மாணவர்களின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் 50% (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள்), 11 ஆம் வகுப்பு மதிப்பெண் 20% மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண் 30% கணக்கிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் பிளஸ் 2 செய்முறை தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு பிளஸ் 1 செய்முறை தேர்வுகளின் மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

தற்போது தமிழக அரசு மதிப்பெண் பட்டியல் வெளியீடு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி வருகிற ஜூலை 19ம் தேதி காலை 11 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு மதிப்பெண்களை இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.gov.in, www.dge2.tn.gov.in ஆகிய இணைய பக்கங்களில் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது. மாணவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்கு மதிப்பெண் விபரங்கள் அனுப்பி வைக்கப்படும்.  மேலும் ஜூலை 22ம் தேதி முதல் மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!