தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? கல்வித்துறை விளக்கம்!

2
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து கல்வித்துறை விளக்கம்!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து கல்வித்துறை விளக்கம்!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? கல்வித்துறை விளக்கம்!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்து தற்போது கல்வித்துறை ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்:

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பள்ளிகள் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்ததனால் மாணவர்களை அதற்காக தயார் செய்ய கல்வித்துறை பாடத்திட்டங்கள் குறைப்பு போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் மாணவர்களின் நலன் கருதி 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்து ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கண்டிப்பான முறையில் பொத்துத்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அம்மாணவர்களும் தொடர்ந்து பள்ளி சென்று வந்து கொண்டுள்ளனர்.

பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு?

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 03 ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மே 02 ஆம் தேதி அன்று தமிழக சட்டமன்ற தேர்தலின் ஒட்டு எண்ணிக்கை பணிகள் நடைபெற இருப்பதால், மறுநாளே (மே 03) பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட முடியாது என ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்தனர். அதனால் பொதுத்தேர்வுகளை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கலாமா என அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

தற்போது கல்வித்துறையிடம் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், பொதுத்தேர்வுகள் தள்ளிப்போகவே வாய்ப்புள்ளது என்றும், ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் தேர்வினை ரத்து செய்வது நல்லது என கல்வியாளர்கள் கருத்து தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

[table id=1078 /

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here